Header Ads

Header ADS

இனி தனியார் பள்ளிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை??? அரசாணைவெளியிட்ட தமிழக அரசு!


ஆங்கில வழி கல்வி என்ற முறையை தனியார் பள்ளிகள் வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டுகொண்டு இருந்தன. இதனால் தமிழக அரசு பள்ளிகளின், தமிழ் வழி கல்வி முறையை புறக்கணித்து, தமிழக மக்கள் ஆங்கில மோகம்

கொண்டு தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வந்தனர்.


 இதனை பயன்படுத்திக்கொண்ட தனியார் பள்ளிகள்,அதிகபட்ச கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வந்திருந்தது.இதனை அடுத்து தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விமுறை சென்ற வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் தமிழ்வழி கல்விமுறையில் நிறைய மாற்றங்களையும் கொண்டுவந்தது. இதற்க்கு நல்ல வரவேற்பு பெருகவே, அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி தொடங்கஅனுமதி கோரி விண்ணப்பித்தது.

இதற்கிடையே, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க அனுமதி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஏற்கெனவே அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக அறிவித்தார்.இந்நிலையில், நேற்று அதற்கான அரசாணையை தமிழக அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடியாக வெளியிட்டுள்ளார்.
 
 அந்த அரசாணையில், ''ஆங்கில வழி கல்விக்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு அதிக அளவில் இருந்து வருகிறது. அதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. எனவே அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கிலவழி கல்வியை விரிவுபடுத்தப்பட உள்ளதாக'' தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ''ஆங்கில வழி பிரிவுகளில் பயிலும் மாணவர்களிடம் எத்தகைய கட்டணமும் வசூலிக்கக் கூடாது.
 
ஆங்கில வழியில் பாடத்தை நடத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதர வசதிகள் போதுமான அளவில் உள்ளதா என்பதைஉறுதிப்படுத்த வேண்டும். ஆங்கில வழி கல்வி கோரும் பள்ளிகளில் 50 சதவீத பிரிவுகள் கட்டாயமாக தமிழ் வழி பிரிவுகளாக இருக்க வேண்டும்''. உள்ளிட்ட நிபந்தனைகள் அந்த அரசாணையில்தெரிவிக்கப்பட்டுள்ளது

2 comments

Dr.Anburaj said...

தனியாா் பள்ளிகளில் துவங்கப்படும் ஆங்கில வழி பிரிவுகளுக்க இனிமேல் அரசு மானியம் உண்டு என்பது அரசு ஆணையின் பொருளா ? அரசு மானயிம் உண்டா ?இல்லையா என்பது குறித்து சற்று வெளிப்படையாக தொிவிக்கலாம்.

Dr.Anburaj said...

ஆசிரியா்களுக்கு அரசு சோதனை மேல் சோதனை வைக்கின்றது.பிஎட் தோ்ச்சி பெற்றவுடன் தகுதி தோ்வு எழுத வேண்டும்.தோ்ச்சி பெற்றவா்கள் தனியாா் பள்ளிகளில் வேலை பார்க்கலாம். அரசு பள்ளிகளில் வேலை பார்க்க தனி தோ்வு எழுத வேண்டும் அதற்கு தகுதித்தோ்விா் தோ்ச்சி பெற்றவா்கள் மட்டுமே தகுதியானவா்கள் என்றுள அரச ஆணையிட்டுள்ளது. ஆசிரியா் பணிதோ்வு எழுத தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீ்க்கலாம்.தகுதித் தோ்வை எழுதியவா்களும் எழுதாதவர்களும் அரசு பள்ளி ஆசிரியா் வேலைக்கான தோ்வை எழுதலாம் என்று திருந்திய ஆணை வழங்க வேண்டும்.

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.