Header Ads

Header ADS

அரசு ஊழியர்களுக்கு வெளிநாட்டு பயண சலுகை




மத்திய அரசு ஊழியர்கள், எல்.டி.சி., எனப்படும் விடுமுறையுடன் கூடிய சுற்றுலா பயண சலுகையில், வெளிநாடுகளுக்குச் சென்று வர அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

பரிசீலனை : மத்திய அரசு ஊழியர்களுக்கு, சுற்றுலா செல்வதற்கு, விடுமுறையுடன், பயணக் கட்டணமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஊழியர்கள் வெளிநாடு செல்லவும் அனுமதி அளிப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. குறிப்பாக, ஆசிய நாடுகளுக்கு செல்ல, அனுமதி அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்களுக்கு பயண சலுகை அளிப்பது தொடர்பாக, சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம், மத்திய தனிநபர் பயிற்சித்துறை அமைச்சகம் கருத்து கேட்டுள்ளது.கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல, விடுமுறையுடன் கூடிய பயணச் செலவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய ஆசிய நாடுகளில், இந்தியாவின் பங்களிப்பை அதிகப் படுத்துவதற்காக, இந்ததிட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


அனுமதி : இந்நிலையில், 'சார்க்' எனப்படும், தெற்காசிய கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு செல்ல, மத்திய அரசு ஊழியர்களுக்கு, எல்.டி.சி., திட்டத்தில் அனுமதி அளிக்க, கடந்த மார்ச் மாதமே மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. ஆனால், முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவர்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.