Header Ads

Header ADS

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறைச் செயலாளர் ஆக்கப் பூர்வமான சந்திப்பு, நேர்த்தியான பேச்சுவார்த்தை CPS திட்டத்தை இரத்துசெய்திடும் முயற்சியின் ஒரு மைல்கல் -





வெற்றி என்பது தொட்டவுடன் கிட்டுவதும் இல்லை..*

*கைக்கு எட்டும் வரை நாம் விட்டு விடுவதும் இல்லை..*

*CPS ஒழிப்பு இயக்கம்.*
*மாநில மையம்.*.

_________________________

*சந்திப்புகளும் முறையீடுகளும்*

_______________________

*CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில மைய முடிவின் அடிப்படையில் இன்றையதினம் (04.09.2024),*


*தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மதிப்புமிகு முருகானந்தம் இ.ஆ. ப.. அவர்களையும்.*


*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் செயலாளர் மதிப்புமிகு முனைவர் சண்முகம் இ. ஆ. ப. அவர்களையும்..*



*தமிழக அரசின் நிதித்துறைச் செயலாளர் மதிப்புமிகு உதயச்சந்திரன் இ.ஆ.ப. அவர்களையும்.*


*தலைமைச் செயலகத்தில் நேரடியாகச் சந்தித்து..*


*CPS திட்டத்தை இரத்து செய்து ஆறரை இலட்சம் அரசுஊழியர்கள் ஆசிரியர்கள் வாழ்க்கையை பாதுகாத்திட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு,.., இத்திட்டத்தை இரத்து செய்வது தொடர்பாக விரிவாக பேசப்பட்டது..*


*CPS , திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 38,000 ம் குடும்பங்களின் இன்றைய அவலநிலை..*


*CPS திட்டத்தில் பணிபுரிந்து பணியிடை மரணமடைந்த 7723  குடும்பங்களின் துயரநிலை..*


*இந்தியாவிலேயே ஓய்வூதியம், குடும்ப  ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட எந்தப் பயனும் இல்லாத தமிழ்நாட்டு அரசு ஊழி்யர்கள், ஆசிரியர்களின் அவலநிலை..*





*CPS திட்டத்தின் பாதிப்புகள்..*


*CPS திட்டத்தை இரத்துசெய்திட இருக்கும் வாய்ப்புகள்..*


*உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது..*


*இன்று நடைபெற்ற ஆக்கப் பூர்வமான சந்திப்பு, நேர்த்தியான பேச்சுவார்த்தை CPS திட்டத்தை இரத்துசெய்திடும் முயற்சியின் ஒரு மைல்கல்*
*வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு.*
*நம்பிக்கையைத் தருகிறது..



*சந்திப்பின்போது தமிழ்நாடு தலைமைச்செயலகச் சங்க முன்னாள் தலைவர்  பீட்டர் அந்தோனிச்சாமி,..*


 *முன்னாள் துணைச் செயலாளர் அருண்,*
 *CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில  ஒருங்கிணைப்பாளர்கள்  பி.பிரடெரிக் ஏங்கெல்ஸ்,* *சு.ஜெயராஜராஜேஸ்வரன்,*
 *மு.செல்வக்குமார்,* *மாநில ஆலோசகர்  ச.இ.கண்ணன்.*
*மாநில இணை ஒருங்கிணைப்பாளர்  ஜான்சன்..*
*சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  வெண்மதி,*
*சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  செல்வம்,* *ஓய்வுபெற்ற ஆசிரியர் திருச்சி கண்ணையன்..*
*ஆகியோர் பங்கேற்றனர்.*


*தோழர்களே!*


*வேகமாக..*
*இன்னும் வேகமாக..*
*இயங்கிக் கொண்டே இருப்போம்!*
*இறுதிவெற்றி நமதே!*


*நம்பிக்கையுடன்,*
*மாநிலமையம்,*
*CPS ஒழிப்பு இயக்கம்*

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.