Header Ads

Header ADS

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டாம் - CEO சுற்றறிக்கை

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டாம் -

CEO சுற்றறிக்கை

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைப்படி பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் நகராட்சி/அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் 2023-2024-ஆம் கல்வியாண்டில் உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்கள் நேரடி நியமனம்/பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மை குழு மூலம் தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு தற்காலிக அடிப்படையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டது. 

தற்போது 2024-2025-ஆம் கல்வியாண்டில் உள்ள இடைநிலை பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை, பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்து கொள்ள எவ்வித அறிவிப்பும் பள்ளிக்கல்வி இயக்கத்திலி  பெறப்படாததால் தற்காலிக ஆசிரியர்களை (கடந்த ஆண்டுகளில் பணியாற்றியவர்கள் மற்றும் புதிய ஆசிரியர்கள் எவரும்) நியமனம் செய்ய வேண்டாம் என அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

👇👇👇👇👇



No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.