தமிழர் ஆடைகள் - கலைச்சொல் அகராதி
கலைச்சொல் (ஒலிப்பு) என்பது, ஏதாவது ஒரு அறிவுத்துறையில் பயன்படக்கூடிய சிறப்புச் சொற்றொகுதியைக் குறிக்கும். ஒவ்வொரு துறைக்குள்ளும் ஒரு கலைச்சொல்லுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பான பொருள்கள் இருக்கக்கூடும். இவை பொது வழக்கில் உள்ள பொருள்களோடு ஒத்திருக்க வேண்டியது இல்லை. ஒரு குறிப்பிட்ட துறை குறிப்பிடத்தக்க காலம் பயிலப்பட்டு வரும்போது அத்துறையில் காணப்படும் இத்தைகைய சிறப்புச் சொற்கள் செறிவான பொருளை உணர்த்துவனவாக வளர்ச்சியடைகின்றன. இவ்வாறான சிறப்புச் சொற்றொகுதியின் பெறுமதி ஒவ்வொரு சொல்லிலும் ஒரு குறிப்பிட்ட அளவு தகவலைப் பொதித்து வைத்திருப்பதில் தங்கியுள்ளது. கலைச்சொல் என்பது சொற்சிக்கனத்தோடு, பொருளில் ஆழத்தையும், துல்லியத்தன்மையையும் பெறுவதற்கான ஒரு வழிமுறையும் ஆகும். இதனால், ஒரு துறைசார்ந்த வல்லுனர்கள் தங்களிடையே அத் துறைசார் விடயங்களைச் சுருக்கமாகவும், துல்லியமாகவும் பரிமாறிக் கொள்வதற்குக் கலைச்சொற்கள் பயனுள்ளவையாக அமைகின்றன.
கலைச்சொற்கள் தொடர்பிலான அணுகுமுறைகள்
கலைச்சொற்களை உள்ளடக்கிய சிறப்பு மொழிவழக்குகள் மொழியின் ஒரு பகுதி என்ற அளவில், அது உணர்வு வெளிப்பாட்டுக்கும், தொடர்பாடலுக்குமான ஒரு ஊடகம் என்ற அடிப்படையையே பெரும்பாலான அணுகுமுறைகள் பொதுவாகக் கொண்டிருந்தன. பயனாளிகளின் நோக்கங்களையும் செயற்பாட்டுத் தேவைகளையும் பொறுத்து, அணுகுமுறைகளிடையே வேறுபாடுகள் காணப்பட்டன. தொடக்கத்தில் மூன்று விதமான அணுகுமுறைகள் கையாளப்பட்டன.
இவை, 1) மொழியியல் அணுகுமுறை, 2) மொழிபெயர்ப்பு அணுகுமுறை, 3) திட்டமிடல் அணுகுமுறை என்பன.
மொழியியல் அணுகுமுறையைப் பொறுத்தவரை மூன்று குழுக்களை முக்கியமாகக் கருதலாம். ஒரு குழுவினர் யூஜின் வூசுட்டரின்"பொதுக் கலைச்சொல்லியல் கோட்பாட்டின்" அடிப்படையில் தமது அணுகு முறையை அமைத்துக்கொண்டவர்கள். இவர்கள் கருத்துருக்களே முதன்மையானவை என்றும் அவற்றுக்கான பெயரீடுகளே கலைச்சொற்கள் எனனவும் கொண்டனர். இக்குழுவினர், கலைச்சொற்களைப் பன்னாட்டு அளவில் தரப்படுத்துதலுக்கும் முக்கியத்துவம் அளித்தனர். இன்னொரு குழுவினர், கலைச்சொற்களை உள்ளடக்கிய சிறப்பு மொழிவழக்கைப், பொது மொழிவழக்கின் ஒரு பாணியாகவே கருதியதுடன், கலைச்சொற்களை, மொழியின் செயற்பாட்டு, தொழில்சார் பாணியின் அலகுகளாகக் கொண்டனர். மூன்றாவது குழுவினர், பன்மொழிச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு, கருத்துருக்களையும், கலைச்சொற்களையும் தரப்படுத்துவது தொடர்பில் தமது அணுகுமுறையை அமைத்துக்கொண்டனர்.
மொழிபெயர்ப்பு அணுகுமுறை மொழிபெயர்ப்புகளுக்கான வசதிகளை வழங்குவதை அடிப்படையாகக் கொண்டது. இந்த அணுகுமுறை, பன்மொழிக் கலைச்சொற்களை உருவாக்குவதற்கும் அவற்றுக்கான தரவுத்தளங்களை உருவாக்குவதற்கும் முக்கியத்துவம் வழங்குவது.[2] பன்மொழி பேசும் சமூகங்களைக் கொண்ட பகுதிகளில், அரசாங்க நிர்வாகத் தேவைகளுக்கு இந்த அணுகுமுறை பெரிதும் பயன்படுகிறது. அதிகாரபூர்வக் கலைச்சொற்களை மொழிபெயர்ப்பாளர்கள் எல்லோரும் பயன்படுத்துவதைக் கலைச்சொல் தரவுத்தளம் உறுதிசெய்கிறது.
Pdf link Available in Below....
👇👇👇👇👇
No comments
Post a Comment