பழைய ஓய்வூதியத் திட்டம் - புதிய சவால்கள்!
பழைய ஓய்வூதியத் திட்டம் - புதிய சவால்கள்!
பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) எதிர்ப்பவர்கள், தங்கள் கடுமையான எதிர்ப்பை பல வகைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆயினும் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு திரும்புவதாக அறிவித்துவிட்டன. இதனைத் தனது தேர்தல் அறிக்கையில் முக்கிய அறிவிப்பாக காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்ததால் கர்நாடகமும் தெலுங்கானாவும் இதே திசையில் செல்லத் தயாராகி வருகின்றன.
மத்திய அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி, அரசு ஊழியர்களின் தொடர் போராட்டத்தின் பயனாக ஒவ்வொரு மாநிலமாக பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறி வருகின்றன. இதை காணும் போது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. எனினும் ஓபிஎஸ் திட்டத்திற்கு சில தடைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
உதாரணமாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌதரி, மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (பிஎஃப் ஆர்டிஏ) 2015 மற்றும் 2023 விதிமுறைகளின் படி, ஓபிஎஸ் முறைக்கு மாறும் மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில்லிருந்து என்பிஎஸ்-கக்காக செலுத்தப்பட்ட தொகையை ஓய்வூதிய நிதியில் இருந்து திரும்பப் பெற இயலாது என்று கூறியிருக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
👇👇👇👇👇
No comments
Post a Comment