Header Ads

Header ADS

பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி மாற்றத்தால் அரசு பள்ளிகளில் ஒரு லட்சம் மாணவர் சேர்க்கை

பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி மாற்றத்தால் 

அரசு பள்ளிகளில் ஒரு லட்சம் மாணவர் சேர்க்கை

தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் காரணமாக கடந்த 1-ம் தேதி முதல் இதுவரை 1 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் அதிக அரசு பள்ளிகள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. மாநிலம் முழுவதும் 38,000 அரசுப் பள்ளிகளும், 8000 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. இதில் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனி நிர்வாகத்தை கொண்டு இருந்தாலும், பள்ளியின் பாடத்திட்டம் தொடங்கி தேர்வுகள், விடுமுறை விதிகள் எல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழ்நாடு அரசு பள்ளிகளில் அடுத்த 2024 - 25ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. கோடை விடுமுறைக்கு முன்னரே பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து, மும்முரமாக மாணவ சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகரான வசதிகளுடன் அரசுப் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் பள்ளிக்கல்வித்துறையும் பல்வேறு திட்டங்கள், வசதிகளைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக வரும் கல்வியாண்டில் இருந்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர்நுட்ப ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

👇👇👇👇👇




No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.