இன்று முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - 9.10 லட்சம் பேர் எழுதுகின்றனர்
இன்று முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு
9.10 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
தமிழகம், புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 4,107 மையங்களில் செவ்வாய்க்கிழமை முதல் நடைபெறவு ள்ளது; இந்தத் தேர்வை எழுதுவதற்கு 9 லட்சத்து 10ஆயிரத்து 24 மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரையிலும், பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 4ம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலும் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தமிழகம் புதுச்சேரியில் மார்ச் 26 முதல் ஏப்ரல்- 8 தேதி வரை 4,107 மையங்களில் நடைபெற உள்ளது.
தேர்வு அட்டவணை:
மார்ச் 26 - தமிழ்,இதர மொழிப் பாடங்கள்
மார்ச் 28 - ஆங்கிலம்
ஏப்ரல் 1 - கணிதம்
ஏப்ரல் 4 - அறிவியல்
ஏப்ரல் 6 - விருப்ப மொழிப் பாடம்
ஏப்ரல் 8 - சமூக அறிவியல்
மேலும் விவரங்களுக்கு...............
👇👇👇👇👇
No comments
Post a Comment