TAMIL - PRIMARY PRACTICE FOR STUDENTS - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, February 7, 2024

TAMIL - PRIMARY PRACTICE FOR STUDENTS

உயிரெழுத்து என்பது பெயர்ச்சொல் என்ற இலக்கண வகையினைச் சார்ந்ததாகும். ஒரு மொழியின் முதன்மையான எழுத்துக்களை, உயிர் எழுத்துக்கள் என்கிறோம்.



அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய 12எழுத்து க்களும், தமிழின் உயிரெழுத்துக்கள் ஆகும்.  a, e, i, o, u ஆகிய 5 எழுத்துக்களும், ஆங்கிலத்தின் உயிர் எழுத்துக்கள் ஆகும்.

தமிழில் உள்ள இலக்கண நூல்களில் எழுத்து என்பது மொழியில் உள்ள ஒலிகளைக் குறிக்கவும், வரிவடிவத்தை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் எழுத்துக்கள் தமிழ் நாட்டில் மட்டுமின்றி பல நாடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழில் உள்ள எழுத்துகளை முதல் எழுத்துகள், சார்பு எழுத்துகள் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்துக் காணும் முறையை நீங்கள் முன்பே அறிந்திருப்பீர்கள். இந்த முதல் எழுத்துகள் முப்பதில் முதலில் வருவன உயிர் எழுத்துகள் பன்னிரண்டு ஆகும். இவை உயிர் போலத் தனித்து இயங்கும் தன்மை உடையவை ஆதலால் உயிர்எழுத்துகள் என்று பெயர் பெற்றன. எனவே எழுத்துகளின் பிறப்பிற்கான இலக்கணத்தைக் காணும் போது உயிர்எழுத்துகளின் பிறப்பினை முதலில் அறிவது மிகவும் பொருத்தமானது.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி.” தமிழானது உலகில் காலம் பிறக்கும் முன் பிறந்தது. எக்காலத்திலும் நிலையாய் இருப்பது.காலம் பல மாறினாலும் கண்டம் பல அழிந்தாலும் அழியாத சிறப்புடைய மொழியாக தமிழ் மொழி திகழ்கிறது.இயல், இசை, நாடகம், எனும் முத்தமிழாய் வளந்து. கன்னி தமிழாய், செந்தமிழாய், வண்டமிழாய், பைந்தமிழாய், வளம் வரும் ஒரே மொழி தமிழ் மொழியாகும். எண்ணற்ற புலவர்களாலும் ,அரசர்களாலும் சங்கம் வைத்து தடத்த பட்ட ஒரே மொழி  தமிழ் மொழியாகும்.

மொழிகளுள் மூத்த மொழியான தமிழ் மொழியின் சிறப்புக்களை போற்றிப் பாடியுள்ள புலவர்களுள் பாரதியார், பாவேந்தர், மற்றும் திருவள்ளுவர் ஆகியோர் முக்கியமானவர்களாவார்.

மக்களின் எழிச்சி கவிஞனாக போற்றப்படுகின்ற பாரதியார் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றும், “சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே அதை தொழுது படித்திடடி பாப்பா” என்றும் குறிப்பிடுகின்றார்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

👇👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD


No comments: