Header Ads

Header ADS

EE - TAMIL - VARISAI SORKKAL

மொழி (language) என்பது ஓர் இணைப்புக் கருவியாகும். இது சிக்கலான தொடர்பாடல் முறைமைகளைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்குமான வல்லமை ஆகும். குறிப்பாக இது இதற்கான மனித வல்லமையைக் குறிக்கும். தனியான ஒரு மொழி மேற்குறித்த முறைமை ஒன்றுக்கான ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.



ஒரு பொருளின் பல நிலைகளுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டுவது தமிழ் மொழியின் சிறப்பாகும். சான்றாக, பூ வின் ஏழுநிலைகளுக்கும் தோன்றுவது முதல் உதிர்வது வரை தனித்தனிப் பெயர்கள் தமிழில் உண்டு. தமிழ் மொழி சொல்வளம் மிக்கது. ஓா் எழுத்தே ஒரு சொல்லாக அமைவது தமிழ் மொழியின் தனிச்சிறப்பாகும்.

பழமையான மொழி, பண்பட்ட மொழி, நம் பைந்தமிழ் மொழி, தேனினும் இனியது நம் தீந்தமிழ் மொழி தமிழ் என்றால் எளிமை. தமிழ் என்றால் அழகு. தமிழ் என்றால் அமிழ்தம். 

காலங்கள் மாற்றம் அடைந்தாலும், உலகின் கண்டங்கள் பல அழிந்து இருந்தாலும் என்றென்றும் அழியாத செல்வமாய் விளங்குவது தமிழ் மொழியே. தமிழ் மொழியானது தமிழ் பேசும் அனைவருக்கும் தாய்மொழியாக சிறந்து விளங்குகிறது. தமிழ் மொழியானது 2500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபினை கொண்டுள்ள நூல் என்று சொல்லப்படுகிறது. தமிழ் என்னும் சொல்லின் பொருளுக்கு இனிமை, எளிமை, நீர்மை என்று பொருளாகும். தமிழ் மொழியானது இந்தியாவில் மட்டுமல்லாமல் இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் ஆட்சிமொழியாகவும், பேசப்படும் சிறந்த மொழியாக உள்ளது தமிழ் மொழி.

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி.” தமிழானது உலகில் காலம் பிறக்கும் முன் பிறந்தது. எக்காலத்திலும் நிலையாய் இருப்பது.காலம் பல மாறினாலும் கண்டம் பல அழிந்தாலும் அழியாத சிறப்புடைய மொழியாக தமிழ் மொழி திகழ்கிறது.இயல், இசை, நாடகம், எனும் முத்தமிழாய் வளந்து. கன்னி தமிழாய், செந்தமிழாய், வண்டமிழாய், பைந்தமிழாய், வளம் வரும் ஒரே மொழி தமிழ் மொழியாகும். எண்ணற்ற புலவர்களாலும் ,அரசர்களாலும் சங்கம் வைத்து தடத்த பட்ட ஒரே மொழி  தமிழ் மொழியாகும்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

👇👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.