தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்புகள்
*🆎 நேரலை செய்திகள்*
*🆎தமிழக பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்.*
*சென்னை:* சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
🆎குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம் அறிமுகம் செய்யப்படும். இந்தத் திட்டத்துக்கு ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
🆎2030-க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும்.
🆎ஒரு கான்கிரீட் வீட்டுக்கு ரூ.3.50 லட்சம் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
🆎நாமக்கலில் ரூ.358 கோடி, திண்டுக்கல்லில் ரூ.565 கோடி, பெரம்பலூரில் ரூ.366 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
🆎முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஊரகப் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதற்காக, ரூ.600 கோடி ஒதுக்கீடு
🆎புதுமைப்பெண் திட்டத்துக்காக ரூ.370 கோடி நிதி ஒதுக்கீடு.
🆎அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம்
🆎இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
🆎சென்னையின் கோவளம், பெசன்ட் நகர், எண்ணூர் ஆகிய கடற்கரைகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்தப்படும்.
🆎தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
🆎சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் பொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
🆎அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்.
🆎தமிழ் மொழியை நவீனப்படுத்த AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.
🆎முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும்.
🆎ரூ.65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.
🆎கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும்.
🆎கீழடியில் திறந்தவெளி அரங்கு ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும்.
🆎சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும்.
🆎விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
🆎ரூ.1,000 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்படும்.
🆎5 ஆயிரம் ஏரி, குளங்களை புனரமைக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
🆎2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு.
🆎‘முதலமைச்சரின் தாயுமானவர்’ என்ற புதிய திட்டம் அறிமுகம்.
🆎நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அரசு முடிவு.
🆎மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி.
🆎குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம் அறிமுகம்.
🆎கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு.
🆎2030-க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். ஒரு கான்கிரீட் வீட்டுக்கு ரூ.3.50 லட்சம் ஒதுக்கப்படும்.
🆎சிங்காரச் சென்னை 2 திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
🆎சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு
🆎சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு
🆎வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ.1000 கோடி ஒதுக்கீடு
🆎பூவிருந்தவல்லியில் ரூ.500 கோடியில் திரைப்பட நகரம்.
🆎அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ.1500 கோடி நிதி ஒதுக்கீடு.
🆎காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளை புனரமைக்க திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
🆎மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக ரூ.13,720 கோடி நிதி ஒதுக்கீடு.
🆎கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் சாலைப்பணிகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
🆎மகளிர் இலவச பேருந்து பயண ‘விடியல் பயணம்’ திட்டத்திற்கு இந்த ஆண்டில் ரூ.3050 கோடி ஒதுக்கீடு.
🆎மகளிர் இலவச பேருந்து திட்டம் மலைப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
பட்ஜெட் செய்திகள் முழுமையாக அறிய Click here
No comments
Post a Comment