திட்டமிட்டபடி நாளை மறுநாள் 15 ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் போராட்டம் ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
------------------------------------------------------
*தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு...*
*மாநில மையம்...*
------------------------------------------------------
.......*சுற்றறிக்கை*.......
------------------------------------------------------
*15.02.2024 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்... மற்றும் 26.02.2024 காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பில் மாற்றம் இல்லை...*
*போராட்டங்கள் திட்டமிட்டபடி நடைபெறும்...*
-----------------------------------------------------
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முகாம் அலுவலகத்திலிருந்து மாண்புமிகு அமைச்சர்கள் ஏ.வ.வேலு, முத்துசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருடன், இன்று (13.02.2024) நண்பகல் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு நாம் சார்ந்துள்ள கூட்டமைப்பான...
*தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் கூட்டமைப்பிற்கு...*
தகவல் வரப்பெற்றதால், கூட்டமைப்பு சார்பாக பேச்சுவார்த்தை நடத்த இன்று (13.02.2024) சென்றிருந்தோம்...
கூட்டமைப்பின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளையும் வலியுறுத்தி பல்வேறு சங்க நிர்வாகிகள் பேசினர்...
அனைத்தையும் கேட்டுக் கொண்ட அமைச்சர் குழு, முதலமைச்சரிடம், இன்று (13.02.2024) நடைபெற்ற பேச்சு வார்த்தை குறித்து மாலையில் விரிவாக தெரிவிக்க உள்ளதாகக் கூறி விடை கொடுத்தனர்...
போராட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து நடைபெறும் பேச்சு வார்த்தை என்பதால், அமைச்சர் குழு கோரிக்கைகள் குறித்த அரசின் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்...
முதலமைச்சர் தான் எந்த அறிவிப்பையும் வெளியிடுவார்...
கடும் நிதி நெருக்கடியில் அரசு உள்ளது ...
ஆண்டுக்கு அறுபத்தி ஐந்தாயிரம் கோடி வட்டி மட்டுமே செலுத்தும் நிலையில் அரசு உள்ளது...
என அரசின் நிதி நிலையினை காரணம் காட்டிக் கொண்டே இருந்தனர் அமைச்சர் குழுவினர்...
பேச்சு வார்த்தை முடிந்த பின், பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் முன் நடைபெற்ற ஆலோசனையில்...
*முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்ட பின்னர் கூடிப் பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கலாம்...*
அதுவரை...
*கடந்த 07.02.2023-ல் எடுக்கப்பட்ட போராட்ட அறிவிப்பின் படி...*
*15.02.2024 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டமும்...*
*26.02.2024 முதல் அறிவிக்கப்பட்ட காலவரையற்ற வேலை நிறுத்தமும்...*
*திட்டமிட்டபடி தொடரும் என முடிவெடுக்கப்பட்டது.*
இந்நிலையில், இன்று (13-2-2024) மாலை....
தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில்..,
"தமிழக அரசின் நிதிநிலை சீரானவுடன் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனவும்,
போராட்டங்களை கைவிட்டு, அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
*இந்த அறிக்கை ஏற்புடையது மட்டுமல்ல, கடும் கண்டனத்திற்கும் உரியதாகும்.*
*தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பு மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களை வேண்டுகோளை நிராகரிக்கிறது...*
*எனவே, கூட்டமைப்பின் மாநில/ மாவட்ட / வட்ட நிர்வாகிகள் மேற்கண்ட இரண்டு போராட்டங்களும் வெற்றி பெற களப்பணிகளை சமரசமின்றி தொடருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்...
No comments
Post a Comment