டிட்டோஜாக் போராட்டம் சார்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, January 15, 2024

டிட்டோஜாக் போராட்டம் சார்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு(டிட்டோஜாக்) மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் 14.01.2024 ஞாயிறு காலை 11மணி முதல் பிற்பகல் 1 மணி முடிய காணொளி வாயிலாக நடைபெற்றது.



*கூட்டத்திற்கு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர்திரு ச.மயில் அவர்கள் தலைமை ஏற்றார்.*

*கூட்டத்தில்‌  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு ந. ரெங்கராஜன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொருளாளர் திரு.பா.பெரியசாமி, தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு அ.வின்சென்ட் பால்ராஜ், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு. இரா.தாஸ், தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு. சி. சேகர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் மன்றம் திரு. ந.சண்முகநாதன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் திரு.அண்ணாதுரை,தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர்திரு. வி.எஸ். முத்துராமசாமி, தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு கோ.காமராஜ் , ஜே. எஸ். ஆர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு. சி.ஜெகநாதன், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு டி. ஆர். ஜான் வெஸ்லி ஆகியோர்  பங்கேற்றனர்.*

 

*கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்....*


*தீர்மானம்:1*


*மாநில முன்னுரிமையினை வலியுறுத்தும் மற்றும் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வைப் பாதிக்கும் அரசாணை 243ஐ ரத்து செய்யும் வரை எவ்வித சமரசத்துக்கும் இடம் இன்றி டிட்டோஜாக் தொடர் போராட்டங்களை நடத்துவது எனவும்...*


 *தீர்மானம்:2*

 

*27.01.2024 அன்று டிட்டோஜாக் சார்பில் நடைபெறும் மாவட்டத் தலைநகர் உண்ணாவிரதப் போராட்டத்தை வலிமையுடன் நடத்துவது தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் 19.01.2024 மாலை அல்லது 20 .01.2024 சனிக்கிழமை மாவட்ட அளவில் டிட்டோஜேக் பேரமைப்பில் இணைந்துள்ள அனைத்து இயக்கங்களின் மாநில, மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்கள் பங்கேற்கும் ஒருங்கிணைந்த போராட்ட ஆயத்தக் கூட்டங்களை  நடத்துவது எனவும்...* 


*தீர்மானம்: 3* 

*சனவரி 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வட்டார அளவில் டிட்டோஜாக்கில் இணைந்துள்ள சங்கங்களின் பொறுப்பாளர்கள் பள்ளி வாரியாகச் சென்று அனைத்து ஆசிரியர்களையும் நேரடியாகச் சந்தித்து அரசாணை:243 ஏற்படுத்தியுள்ள பாதகங்களை விளக்கிக் கூறி,27.01.2024 மாவட்டத் தலைநகர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆசிரியர்களை அணி திரட்டுவது எனவும்....*


*தீர்மானம்:3*

*12.10.2023 அன்று மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் மதிப்புமிகு. பள்ளிக்கல்வி இயக்குநர், மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் முன்னிலையில் டிட்டோஜாக்குடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையி ஏற்றுக்கொண்ட 12அம்சக் கோரிக்கைகள் மீது உடனடியாக ஆணை பிறப்பிக்க வலியுறுத்தியும்,*


*ஒன்றிய முன்னுரிமை என்ற 60 ஆண்டுகால நடைமுறையை எவ்வித ஆய்வும், ஆலோசனையும் இன்றி,எதேச்சதிகாரமாக மாற்றி அமைத்து வெளியிடப்பட்டுள்ளஅரசாணை:243ஐ உடனடியாக இரத்து செய்ய வலியுறுத்தியும்,*


*இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், குறிப்பாகப் பெண்ணாசிரியர்க ளின் பதவி உயர்வை முற்றிலும் பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளவிதித் திருத்தங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும்,*


*டிட்டோஜேக் பேரமைப்பு அறிவித்துள்ள 27.01.2024 மாவட்டத் தலைநகரில் நடைபெறக்கூடிய மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை மிக எழுச்சியாக நடத்தித் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மத்தியில்  ஏற்பட்டுள்ள எதிர்ப்பு உணர்வினை அரசுக்கும்,பள்ளிக் கல்வித்துறைக்கும்தெரிவிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது*


*தீர்மானம்:4* 

 

*மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் 23.01.2024 செவ்வாய்க்கிழமைஅன்று சென்னையில் கூடி, மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும், மதிப்புமிகு. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களையும், மதிப்புமிகு. பள்ளிக்கல்வி இயக்குநர், மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோரையும் சந்தித்து அரசாணை:243ஆல் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரடியாக எடுத்துக் கூறுவது எனவும், தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் 90% ஆசிரியர்களின் பதவி உயர்வைப் பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள விதித்திருத்தங்களைக் கைவிட வலியுறுத்துவது எனவும், ஒன்றிய முன்னுரிமையே தொடர வேண்டும் என்பதை வலியுறுத்துவது எனவும்...* 


*தீர்மானம்:5*


*டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு 23.01.24 அன்று மாலை சென்னையில் கூடி அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைகளைத் திட்டமிடுவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.************************

*டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு*

No comments: