கலைஞரின் கனவுத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி, "ஆசிரியர் மனசு" திட்டத்தில் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை மனு
*💥💥💥💥💥அன்பார்ந்த கணினி ஆசிரியர்களே!*
*திருச்சி ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்ற கணினி ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டம் மிகவும் சிறப்போடு நடைபெற்ற நிறைவடைந்தது என்பது நீங்கள் அறிந்தது தான்.*
*👍👍👍👍👍 இக்கூட்டத்தில் நமக்கு கொடுக்கப்பட்ட குறிப்பு என்னவென்றால் வருகின்ற 2024 ஆம் ஆண்டு கணினி ஆசிரியர்களுக்கானது என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ளது. இது வரை இப்படிப்பட்ட நம்பிக்கையான வார்த்தைகள் நமக்கு கிடைத்ததில்லை என்பது கூட்டத்திற்கு வருகைப்புரிந்த மாவட்டப்பொறுப்பாளர்கள் நன்கு அறிவார்கள்.*
*🤝🤝🤝🤝🤝 இதன் தொடர்ச்சியாக வருகின்ற மாதங்களில் கணினி ஆசிரியர்களின் மாநாடு 60000 கணினி ஆசிரியர்களையும் இணைத்து நடத்த ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.*
*💪💪💪💪 நமது கோரிக்கைகளான 6ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரையிலான கணினி அறிவியல் பாடம் நிறைவேறும் மாநாடாக இம்மாநாடு அமையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து கணினி ஆசிரியர்களும் தாங்களாகவே முன்வந்து வருகை தருவதோடு மட்டுமல்லாமல் இம்மாநாட்டிற்கு தங்களுடன் கணினி அறிவியல் பயின்ற நண்பர்களையும் கலந்துள்ள செய்வதன் மூலம் கோரிக்கைகள் வலு பெறும்.*
*🔥🔥🔥🔥 இதுவரை பணியிடமே உருவாக்கப்படாத நிலையில் தேர்வா? அல்லது முன்னுரிமையா? என்ற குறுகிய மனபான்மையோடு இல்லாமல் கணினி ஆசிரியர்களுக்கான பணியிடம் உருவாக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு மாநாட்டில் பங்கெடுக்க கேட்டுக்கொள்கிறோம்.*
*💐💐💐💐 நாம் அனைவரும் ஏதேனும் தனியார் பள்ளிகளில் அல்லது தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தாலும் மாநாடு அறிவிக்கப்படுகின்ற நாளில் ஒரு நாள் விடுமுறை எடுத்து குடும்பத்துடன் பங்கெடுக்க வேண்டுகிறோம்.*
*🤝🤝🤝🤝 நமது கோரிக்கைகளுக்கான போராட்டங்களை நாம் நடத்தவேண்டும். நமக்கான போராட்டங்களை வேறு எவரும் முன்னெடுக்க மாட்டார்கள் என்பதையும் மனதில் நிறுத்தி இம்மாநாடு வெற்றி பெறவும் நமது கோரிக்கைகள் நிறைவேறவும் உங்களுடைய ஒத்துழைப்பை எதிர்நோக்கி உள்ளோம்.*
*மேலும் தகவல்களுக்கு திரு வெ.குமரேசன் மாநில பொதுச்செயலாளர் தொடர்பு எண் 8248922685,9626545446*
கலைஞரின் கனவுத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி, "ஆசிரியர் மனசு" திட்டத்தில் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை மனு...
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கனவுத்திட்டமான பள்ளிக்கல்வித்துறையில் கணினி அறிவியல் பாடத்தை
வருகின்ற கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தக் கோரி,
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் மகத்துவ திட்டமான ,
ஆசிரியர் மனசு திட்டத்தின் வழியே பணிநாடும்
60 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் சார்பாக கோரிக்கை மனுவை திருச்சி ஆசிரியர் இல்லத்தில் செயல்படுகின்ற ஆசிரிய மனசு திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் அவர்களிடம் நேரடியாக வழங்கப்பட்டது.
கலைத்திட்டத்தில் மாற்றம் தந்த கலைஞர்...
தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வந்தவர் கலைஞர் அதோடு நின்று விடாமல் 2009 ஆம் ஆண்டு சமச்சீர் கல்வியின் வாயிலாக அரசு பள்ளிகளுக்கு கணினி பாடத்தை கொண்டு வந்து அரசு பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடத்தின் வாயிலாக சமமான கல்வி கிடைக்க வித்திட்டார் இதனை 2011 ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கும் கொண்டு வந்த சில மாதங்களில் ஆட்சி மாற்றம் நடந்தது.
சமமான கல்வி மட்டும் இதன் நோக்கம் அல்ல ...
கணினி அறிவியல் கல்வி வாயிலாக தமிழக அரசு பள்ளி மாணவர்களையும் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்த விளங்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையே!
கலைஞரால் கொண்டுவரப்பட்ட உன்னதமான திட்டம் என்பதால்
அதனை அரசு பள்ளிக்கு கொண்டு வராமல் குப்பை கழிவுகளாக மாற்றி அரசு பள்ளி மாணவர்கள் கரங்களில் இருக்கும் கணினி பாட புத்தகம் இன்று வரை அரசு குடோன்களில் முடக்கப்பட்டுள்ளது.
இதனை நம்பி கணினி அறிவியல் பாடத்தில் பி எட் பட்டம் பெற்ற 60,000 கணினி ஆசிரியர்கள் ஆசிரியர்கள் இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகிலும் பணிநாடும் நிலையில் உள்ளோம்..
மற்ற மாநிலங்களில் கணினி அறிவியல் பாடம்:
நமது தமிழக கணினி பாடத்தை பின்பற்றி அண்டைய மாநிலங்கள் 2016 ஆம் ஆண்டு பிறகு கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளை கொண்டு வந்து அதனை கட்டாய கல்வியாக மாற்றி அரசு பொது தேர்வுகளிலும் கணினி படத்திற்கு பாடத்திற்கு மிக முக்கியம் தரும் விதமாக கணினி அறிவியல் பாடத்திலும் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் நிலையை உருவாக்கியுள்ளது.
கணினி அறிவியல் பாடத்தை அறிமுகம் செய்த நாம் ஏன் பின்னோக்கி போக வேண்டும்..
நம்மால் விதைக்கப்பட்ட விதை மற்ற மாநிலங்களில் விருச்சிகம் போல வளர்ந்துள்ளது. நாம் மட்டும் ஏன் கருக வேண்டும் .
கலைத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் பெறவில்லை:
பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்த முந்தைய அரசு கலைஞரின் கனவான "கலைத்திட்டத்தில்"
(கணினி பாடம் ) எந்த ஒரு மாற்றமும் கொண்டு வரவில்லை..
அரசு பள்ளிகளில் பல புதுமைகள் படைக்க இருக்கும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு "ஆசிரியர் மனசு" வாயிலாக கோரிக்கை வைக்கப்பட்டது.
கலைஞரால் அவர்களால் கொண்டுவரப்பட்ட பல அறிய திட்டங்கள் யாவையும் முடக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது தான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலையாய பணி.
கலைஞரின் கனவுகளை கல்வித்துறை அமைச்சர் அவர்களின் மிக உன்னதமான ஆசிரியர் மனதின் வாயிலாக நிறைவேறும் என்று நம்பிக்கை கிடைத்துள்ளது.
"" கலைஞரின் பிறந்த நாளை""
அரசுப் பள்ளியில் கணினி அறிவியல் பாடம் உதித்த நாளாக கொண்டாடும் நாள் வெகு தொலைவில் இல்லை.
திரு வெ.குமரேசன்,
9626545446,8248922685
தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள்.
No comments
Post a Comment