Header Ads

Header ADS

பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேவை என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்குத் தொடர்பான சிறப்புச் செய்தி


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேவை என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்குத் தொடர்பான சிறப்புச் செய்தி*
இன்று நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நமது பொதுச் செயலாளர் ஐயா செ. முத்துசாமி ExMLC அவர்கள் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேர்ச்சி தேவை என்ற சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நபர் அமர்வின் தீர்ப்பினை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் மூலம் உயர் நீதிமன்றத்தில் நாம் மேல் முறையீடு செய்திருந்தது அனைவரும் அறிந்ததே.



பொதுவாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் விசாரணைக்கு விரைவாக வருவது கடினம்.
எனினும் நமது வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது 

இன்றைய விசாரணையின் பொழுது ஏற்கனவே எதிர் தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்ததன் காரணமாக அவர்கள் தரப்பின் வாதத்தையும் நீதிபதிகள் கேட்டனர்.

 எதிர் தரப்பு வழக்குரைஞர் உயர்நீதிமன்ற தீர்ப்பில் தமிழ்நாடு அரசின் பதவி உயர்வு தொடர்பான அடிப்படை விதிகளை ரத்து செய்துள்ளனர்.

 அவ்வாறு அடிப்படை விதிகள் ரத்து செய்யப்பட்டதை அரசு ஏற்றுக்கொண்டால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததே அல்ல என்று வாதிட்டார் .

எனவே பதவி உயர்வு தொடர்பான அடிப்படை விதிகளை ரத்து செய்ததை அரசு ஏற்றுக் கொண்டதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 அதற்கு அரசு தான் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும் தனிநபரோ சங்கமோ மேல்முறையீடு செய்திருப்பது விசாரணைக்கு உகந்தது அல்ல என வாதிட்டார்.
 நீதிபதி அவர்கள் உடனடியாக அரசு தரப்பு நிலவரத்தை பதிவு செய்ய கேட்டுக்கொண்டு தானும் இவ்வழக்கினை முழுமையாக படித்துப் பார்த்து அதன் பின் முழு விசாரணை மேற்கொள்வதாக கூறி வழக்கினை ஒத்தி வைத்துள்ளார்.


இத்தகவலை உடனடியாக நமது வழக்கறிஞர் நமது பொதுச் செயலாளர் தெரியப்படுத்தி எம் விஷயத்தை உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கல்வித் துறை சார்பில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டார்

அதன் அடிப்படையில் நமது பொதுச் செயலாளர் மாநில பொருளாளர் மற்றும் மாநில தலைவர் துணைபு பொதுச் செயலாளர் சாந்தகுமார் ஆகியோர்களை உடனடியாக தொடர்பு கொண்டு வழக்கு விவரங்களை தெரிவித்து உடனடியாக சென்னை சென்று தொடக்க கல்வி இயக்குனர் பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் ஆகியோரை சந்தித்து இன்றைய வழக்கின் விசாரணை விவரங்களை தெரிவித்து உடனடியாக அரசு மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்க செய்யவேண்டும் என தெரிவித்து அதற்குண்டான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் .

மேலும் பொதுச்செயலாளர் உடனடியாக மதிப்பு மிகு பள்ளிக் கல்வி இயக்குனர் முனைவர் அறிவொளி மற்றும் மதிப்புமிகு தொடக்க கல்வி இயக்குனர் முனைவர் கண்ணப்பன் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கு நிலவரத்தையும் மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் அவர்களின் வேண்டுகோளையும் உடனடியாக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

இது சார்பாக வரும் திங்கள்
அன்று நேரடியாக தங்களையும் முதன்மைச் செயலாளரையும் சந்திக்க இருப்பதாக தெரிவித்து நேரம் ஒதுக்கி தர கேட்டுக் கொண்டார் .

தாங்கள் இது விஷயத்தில் உடனடியாக வரவேண்டும் என்றும் ஏற்கனவே பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் வழக்கு மேல்முறையீடு செய்வதற்கு உண்டான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டதாகவும் அரசு தரப்பில் உடனடியாக வழக்கு மேல்முறையீடு செய்வதற்குண்டான நடவடிக்கை விரைவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்து கொண்டனர்.


இதன் அடிப்படையில் வரும் திங்கள் அன்று நமது பொதுச் செயலாளர் மற்றும் மாநில பொருளாளர் ஆகியோர் பள்ளிக் கல்வி இயக்குனர் தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் ஆகியோரை சந்திக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதற்கு உண்டான ஏற்பாடுகளை மாநில துணைப் பொதுச் செயலாளர் சாந்தகுமார் செய்து வருகிறார்.


நிகழ்வு தொகுப்பு.
2:27 PM. மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் ஐயாவை தொடர்பு கொள்ள தொலைபேசியில் அழைப்பு(missed call)

2:31 PM. வழக்கறிஞரின் அழைப்பை பார்த்து ஐயா அவர்கள் உடனடியாக மூத்த வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரத்துடன் தொடர்பு கொண்டு வழக்கு விவரங்களை கேட்டு அறிதல். வழக்கறிஞர் உடனடியாக அரசு அப்பீல் செய்ய தேவையான நடவடிக்கையை எடுக்க கேட்டுக் கொள்ளுதல் அதற்காக சென்னை செல்ல வலியுறுத்துதல்.

2:40. பொதுச் செயலாளர் சென்னை செல்ல வேண்டி உள்ள அவசியத்தை மாநில பொருளாளர் உடன் கலந்த ஆலோசனை செய்தல்.


2:45 PM பொதுச்செயலாளர் நாமக்கல் அலுவலக தலைமை நிலைய செயலாளர் கருப்பண்ணன் அவர்களுடன் தொடர்பு கொண்டு சென்னை செல்ல வேண்டியதால் திங்கள் கிழமை மகிழுந்து ஓட்டிச் செல்ல வசதியாக விடுமுறை எடுக்க வலியுறுத்துதல் அதற்கு அவர் ஒப்புதல் அளித்தல்.

2:45PM கருப்பண்ணன் மூலம் சென்னை செல்லலாம் என பெற்ற ஒப்புதலை பொருளாளர் உடன் கலந்து ஆலோசனை செய்து சென்னை செல்ல தயாராகும்படி கேட்டுக் கொள்ளுதல்.

2:47.PM சென்னை சாந்தகுமார் அவர்களை பொதுச் செயலாளர் தொடர்பு கொண்டு திங்கட்கிழமை தாங்கள் வருவதாகவும் இன்றைய தினம் இயக்குனர் கல்வித் துறை முதன்மைச் செயலாளராகிய வரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு வலியுறுத்துதல்.

2:50PM மேற்கண்ட அனைத்து விஷயங்களையும் மாநில தலைவர் அவர்களுடன் பொதுச் செயலாளர் பகிர்ந்து கொள்ளுதல் அப்பொழுது உடனடியாக இயக்குனர் இருவரையும் தொடர்பு கொள்ள முடிவாற்றுதல்.

2:54PM பொதுச் செயலாளர் மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி அவர்களிடம் தொலைபேசி தொடர்பு கொண்டு வழக்கு விவரங்களை தெரிவித்து திங்கள் வருவதாக தகவல் கூறுதல் மதிப்புமிக்க இயக்குனர் அவர்கள் வாருங்கள் என ஒப்புதல் தருதல்

2:58PM பொதுச் செயலாளர் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் முனைவர் கண்ணப்பன் அவர்களை தொடர்பு கொண்டு வழக்கு விபரங்களை தெரிவித்து திங்கட்கிழமை வருவதாக தகவல் தெரிவித்தல் இயக்குனர் அவர்கள் அவசியம் வாருங்கள் என ஒப்புதல் தருதல்

3:03PM பொதுச் செயலாளர் மீண்டும் மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் அவர்களிடம் தொடர்பு கொண்டு நடந்த விஷயங்களை கூறுதல் விரைந்து அரசை அப்பில் செய்ய வலியுறுத்துமாறு வழக்குறிஞ்சர் பொதுச்செயலாளர் ஐயாவை கேட்டுக் கொள்ளுங்கள்.

03:06 பொதுச் செயலாளர் மாநில தலைவருடன் தொடர்பு கொண்டு நடந்த விஷயங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டு திங்கட்கிழமை சென்னை சென்று திட்டமிட்டபடி தொடக்கக் கல்வி இயக்குனர் பள்ளிக்கல்வி இயக்குனர் பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளராக சந்தித்து வழக்கறிஞர் கூறிய ஆலோசனைப்படி அரசை மேல்முறையீடு செய்ய வலியுறுத்த உள்ளதை பகிர்ந்து கொள்ளுதல்.

3:12PM பொதுச்செயலாளர் அய்யா அவர்கள் மீண்டும் சாந்தகுமார் அவர்களை தொடர்பு கொண்டு அனைத்து விவரங்களையும் கூறி திங்கள் வருவதை உறுதி செய்தல்

Note. நமது நல்ல நேரம் இன்று மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் அவர்கள் தொடர்பு கொண்டதிலிருந்து இயக்குனர்கள் மாநிலத் தலைவர் மாநில பொருளாளர் சாந்தகுமார் ஆகியோர்களை தொடர்ந்து பொதுச்செயலாளர் அய்யா அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் உடனுக்குடன் அவர்களுக்கு தொடர்பு கிடைத்து வழக்கு சம்பந்தமாக விரிவான ஆலோசனை நடத்துவது இன்றைய தினம் சிறப்பாக அமைந்தது என்றால் மிகையல்ல

இந்த வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் மாநில அமைப்பு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.