மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், அகவிலைப்படி உயர்வு 2023 ஜூலை 1 தேதி முதல் அமலுக்கு வரும் என தெரியவந்துள்ளது.
தற்போது, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 42 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, அது உயர்த்தப்பட்டதன் மூலம் அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அரசின் முடிவால் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். ல் வழங்கி உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
share to all

No comments
Post a Comment