Header Ads

Header ADS

இன்று (05.10.2023) டிட்டோஜேக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

இன்று (05.10.2023) டிட்டோஜேக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.

*தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்)*

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜேக்
பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் 05.10.2023 காலை 11.00 மணியளவில் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.சி.சேகர் அவர்கள் தலைமையில் சென்னை திருவல்லிக்கேணி, நல்லதம்பி வீதியில் அமைந்துள்ள தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.

 கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

*தீர்மானம் - 1*

தங்களுடைய கோரிக்கைகளுக்காக சென்னை பள்ளிக்கல்வி இயக்ககம் பேராசிரியர் க.அன்பழகனார் கல்வி வளாகத்தில் அமைதி வழியில் போராடி வந்த இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர சிறப்பாசிரியர்கள், பணி நியமனத்திற்காக போராடி வந்த தகுதித்தேர்வு முடித்த பணி நாடுநர்கள் ஆகியோரை கைது செய்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிடடோஜேக் பேரமைப்பு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்திட தமிழக அரசை பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

*தீர்மானம்-2*

டிட்டோஜேக்கின் 30 அம்சக் கோரிக்கைகளை விளக்கியும், கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், பணி நிரந்தரம் கோரும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள், பணி நியமனத்திற்காக போராடி வந்த தகுதித்தேர்வு முடித்த பணி நாடுநர்கள் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழக முழுவதும் 05.10.2023 மாலை பயிற்சி மையத்தின் முன்பு கூட்டங்களை நடத்துவது என டிட்டோஜேக் பேரமைப்பு முடிவு செய்து அறிவிக்கிறது.

*டிட்டோஜாக்*


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.