ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பணி நிறைவுக்கு அடுத்த நாள் அவருடைய வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு எனில் அவருக்கு ஒர் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கி அவருக்கான ஓய்வூதியம், பணிக்கொடை, ஓய்வூதியம் தொகுத்து பெறுதல் சார்ந்து செயல்முறைகள்...
ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பணி நிறைவுக்கு அடுத்த நாள் அவருடைய வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு எனில் அவருக்கு ஒர் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கி அவருக்கான ஓய்வூதியம், பணிக்கொடை, ஓய்வூதியம் தொகுத்து பெறுதல் ஆகியவற்றை அரசாணை 311, 98 ஆகிவற்றின் அடிப்படையில் பெற்று வருகிறோம்.
ஆசிரியர்களின் நலன் சார்ந்த எந்த செயலுக்கும். சில அமைச்சுப் பணியாளர்கள் எப்போதும் முட்டுக்கட்டையாக இருப்பதுபோல இது சார்ந்த விடயங்களிலும் பல அலுவலகங்களில் EL closer , half pay leave closer ஆகியவற்றிற்கு இந்த விதி பொருந்தாது என்று முட்டுகட்டைப் போடுகிறார்கள்.
அரசாணை 311, 98
ஆகியவற்றின்படி EL closer ,half pay leave closer க்கும் ஒரு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதற்கான அரசு அரசு ஆதாரக் கடிதம் கிடைத்தது .
இந்த அரசு கடிதத்தை இங்கே பதிவிடுகிறேன்.தேவைபடுவோர்க்கு பயன்படும்.
No comments
Post a Comment