2023-2024-பட்ஜெட்டில் உரை...pdf. - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, March 20, 2023

2023-2024-பட்ஜெட்டில் உரை...pdf.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் .பட்ஜெட்டில் உரை....

*2023-2024 கல்வியாண்டு முதல், 110 கோடி செலவில் 4 மற்றும் 5 ம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் விரிவுபடுத்தப்படுகிறது.*

பட்ஜெட்டில் அறிவிப்பு Click here pdf

தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்புகள்:

வயது முதிர்ந்த மேலும் 590 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணம்

தமிழ் கணினி பண்பாட்டு மாநாடு நடத்தப்படும்

தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் - நிதியமைச்சர்


 முன்னாள் படைவீரர்கள் நலன்:

போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ₹20 லட்சம் நிதியுதவி ₹40 லட்சமாக அதிகரிப்பு - நிதியமைச்சர்


 இலங்கை மறுவாழ்வு முகாம்களில் மீதமுள்ள 3,959 வீடுகள் கட்ட வரும் நிதியாண்டில் ₹223 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர்


 தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்புகள்:

சென்னை சங்கமம் கலைவிழா மேலும் 8 முக்கிய நகரங்களில் விரிவு செய்யப்படும்

நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க, கலைஞர்களை பாதுகாக்க ₹11 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர்


 வருவாய் பற்றாக்குறையை ரூ.62 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளோம்"

- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்



 பள்ளிக் கல்வித் துறைக்கு 40 ஆயிரத்து 299 கோடி ரூபாய் ஒதுக்கீடு - நிதி அமைச்சர்


 முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பன்னோக்கு மருத்துவமனை - பழனிவேல் தியாகராஜன்


 தமிழ்நாடு பட்ஜெட் : 2023 - 24

"பெண் தொழில் முனைவோர், புதிய தொழில்களை தொடங்க உதவும் வகையில் இயக்கம் ஒன்று அமைக்கப்படும்"

-அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்


மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ₹30,000 கோடி அளவில் வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் - நிதியமைச்சர்

*பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள்:*

சென்னை: 2023-24ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் இன்று (மார்ச் 20) தாக்கல் செய்தார். 

இதில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரூ.6,967 கோடியும், மருத்துவத்துறைக்கு ரூ.18,661 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

* மொழிப்போர் தியாகி தாளமுத்து நடராஜருக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்

* தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்

* அம்பேத்கரின் நூல்களை தமிழில் மொழிபெயர்க்க ரூ.5 கோடி மானியம் வழங்கப்படும்

* சங்கமம் கலைவிழா, மேலும் 8 முக்கிய நகரங்களில் விரிவுப்படுத்தப்படும்.

* மாநிலம் முழுவதும் 25 பகுதிகளில் நாட்டுப்புற பயிற்சி மையம் அமைக்கப்படும்.

* தமிழ் மொழியில் அதிகளவில் மென்பொருள் (சாப்ட்வேர்) உருவாக்கப்படும்.

* சோழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

*வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1500 கோடி*

* தமிழறிஞர்கள் 591 பேர் இலவச பயணத் திட்டம் அமல்படுத்தப்படும்.

* இலங்கை தமிழர்களுக்கு 3949 வீடுகள் கட்ட ரூ.233 கோடி ஒதுக்கீடு.

* தமிழக ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்தால், அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி ரூ.20 லட்சத்தில் இருந்து, ரூ.40 லட்சமாக உயர்த்தபடும்.

* தமிழ் வளர்ச்சித்துறைக்கு கூடுதலாக ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு.

* 711 தொழில் நிறுவனங்களில் 8 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

* கிண்டியில் கருணாநிதி பெயரில் கட்டப்பட்டுவரும் மருத்துவமனை இந்தாண்டு திறக்கப்படும்.

* வடசென்னை மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு 147 கோடியில் புதிய கட்டடம் திறக்கப்படும்.

* புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1500 கோடி ஒதுக்கீடு

* அனைத்து மாவட்டங்களிலும் ரூ.10 கோடி செலவில் புத்தக திருவிழா நடத்தப்படும்.

*ஜூனில் கருணாநிதி நூலகம்*

* மருத்துவத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு

* குடிமைப் பணி முதன்மை தேர்வுக்கு தயாராக 1000 மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

* ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு ரூ.7500 வழங்கப்படும்.

* அரசு பள்ளிகளில் 4, 5ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

* சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் சிஎம்டிஏ மூலம் சென்னையில் அமைக்கப்படும்.

* உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரிக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு

* மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகம் ஜூன் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும்.

* பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு.

*தூய்மை பணிகளுக்கு நவீன இயந்திரம்*

* அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

* நான் முதல்வன் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு

* தொழிற்பள்ளி நிலையங்கள் ரூ.2,877 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.

* சென்னை அம்பத்தூரில் இளைஞர்களுக்கான ரூ.120 கோடியில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.

* ரூ.25 கோடியில் ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கம் சீரமைக்கப்படும்.

* உயர்கல்வித் துறைக்கு ரூ.6,967 கோடி ஒதுக்கீடு

* மதுரை, கோவை, திருச்சி, நீலகரியில் ஆதிதிராவிடர் நல விடுதிகள் ரூ.100 கோடியில் கட்டப்படும்.

* தூய்மை பணிகளுக்கு நவீன இயந்திரம் வாங்கப்படும்.

*காலை உணவு திட்டம்.*

* முதல்வரின் காலை உணவு திட்டம் ரூ.500 கோடியில் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

* முதல்வரின் காலை சிற்றுண்டி திட்ட விரிவாக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு; இதன் மூலம் லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.

* பாதாள சாக்கடைகளையும், கழிவுநீர் தொட்டிகளையும் சுத்தப்படுத்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

* ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.3,513 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* ரூ.110 கோடியில் 4, 5ம் வகுப்புக்கும் 'எண்ணும் எழுத்தும்' திட்டம் விரிவாக்கம்.

* 15 மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலனுக்காக ரூ.1,580 கோடி ஒதுக்கீடு.

* மாற்றுத்திறனாளிகள் நலன் ரூ.1,444 கோடி ஒதுக்கீடு.

* புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2.20 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர்.










No comments: