எண்ணும் எழுத்தும் - இரண்டாம் பருவ தொகுத்தறி தேர்வு பற்றிய சந்தேகமும் .. அதற்குரிய விளக்கமும்
எண்ணும் எழுத்தும் - இரண்டாம் பருவ தொகுத்தறி தேர்வு பற்றிய 8 சந்தேகமும் .. அதற்குரிய விளக்கமும்
👇👇👇👇👇👇
Scert Dir.proceedings
1) 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை 2- ஆம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு எப்போது?
1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கான தொகுத்தறி மதிப்பீடு 13.12.2022 முதல் 23.12.2022 வரை முதல் பருவத்தில் நடத்தப்பட்டது போலவே நடத்த வேண்டும்.
2 ) 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை 2- ஆம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு எந்தெந்த முறைகளில் நடத்தப்பட வேண்டும்?
1 முதல் 3 ஆம் வகுப்பு வரை இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு 'எண்ணும் எழுத்தும் செயலி மூலமாகவும், எழுத்துபூர்வமாகவும் நடத்தப்பட வேண்டும்.
3) எழுத்துப் பூர்வமாக நடைபெற இருக்கும் தேர்வில் வினாத்தாள்கள் எவ்வாறு வழங்கப்படும்?
*PDF வடிவிலான தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள்கள் (தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம்) ஆசிரியர்களின் எண்ணும் எழுத்தும் செயலியிலேயே பதிவிறக்கம் செய்யத்தக்க வகையில் வழங்கப்படும்.*
4) எண்ணும் எழுத்தும் செயலி மூலமாக தேர்வு எந்த தேதி முதல் எந்த தேதி வரை நடத்தப்பட வேண்டும் ?
எண்ணும் எழுத்து செயலி மூலமாக 13.12.2022 முதல் 20.12.2022 வரை தேர்வு நடத்தப்பட வேண்டும்.
5) எழுத்துப்பூர்வமான தேர்வு எப்போது நடத்தப்பட வேண்டும்?*
*எண்ணும் எழுத்து செயலி வாயிலாக மாணவர்களுக்கு மதிப்பீடு முடித்த பிறகு கடைசி மூன்று தினங்களான 21,22 மற்றும் 23.12.2022 தேதிகளில் முறையே தமிழ்,ஆங்கிலம்,கணிதம் பாடங்களுக்கான தொகுத்தறி மதிப்பீட்டினை நடத்தலாம்.*
6) எழுத்துப்பூர்வமான தேர்வுக்குரிய வினாத்தாள்களை பாடம் கற்பிக்கும் ஆசிரியர் வடிவமைத்து கொள்ளலாமா?*
*எண்ணும் எழுத்தும் செயலியில் pdf வடிவத்தில் வழங்கப்படும். தொகுத்தறி வினாத்தாளைத் தவிர ஆசிரியர் விரும்பும் வகையில் தொகுத்தறி வினாத்தாளை வடிவமைத்து அதன் விளைவுகளை விருப்பத்தின் அடிப்படையிலும் மதிப்பீடு செய்து கொள்ளலாம்.*
7) எழுத்துப்பூர்வமாக நடத்தப்படும் தேர்விற்கான மதிப்பீடு கட்டாயமா?
எழுத்துப்பூர்வமாக நடத்தப்படும் தேர்விற்கான மதிப்பீடு முற்றிலும் விருப்பத்தின் அடிப்படையிலானது (Only Optional) மட்டுமே.
8) எழுத்துப்பூர்வமாக நடத்தப்படும் தேர்விற்கான மதிப்பெண்களை எண்ணும் எழுத்தும் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டுமா?
எழுத்துப்பூர்வமாக நடத்தப்படும் தேர்விற்கான மதிப்பெண்களை எண்ணும் எழுத்தும் செயலியில் பதிவேற்றம் செய்யத் தேவையில்லை.
⚧ *Join Telegram group*
No comments
Post a Comment