ஜாக்டோ-ஜியோ-05.1.2023 அன்று கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தலைநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
📚*💐ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது அதில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
*💐(1)5.1.2023 அன்று கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தலைநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
*💐(2)8.1.2023 அன்று மாநில உயர்மட்டக்குழுக்கூட்டத்தை மதுரையில் கூட்டி அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
*💐ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு வி.எஸ்.முத்துராமசாமி அவர்கள் கலந்துகொண்டார்.
*ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் 26/12/2022 அன்று சென்னையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது.*
*இரா.தாஸ் ஜே.காந்திராஜ் ஆ.செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.அதில் கீழ்க்கண்ட முடிவுகள் தீர்மானிக்கப்பட்டன.*
*பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் முடக்கப்பட்ட அகவிலைப்படி,சரண்டர் உடனே வழங்க வேண்டும்.*
*இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.*
*தொகுப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சத்துணவு,அங்கன்வாடி,MRB செவிலியர், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர் உள்ளிட்டோரு கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.*
*காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.*
*உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி*
*தமிழகம் முழுவதும் 05/01/23 அன்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.*
*வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றாதபட்சத்தில் வருகின்ற 08/01/2023 மதுரையில் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்*
*மற்றும்*
*உயர்மட்ட குழு கூட்டம் கூட்டி அடுத்த கட்ட இயக்கத்தை திட்டமிட உள்ளோம்*
*இக்கூட்டத்தில் அனைத்து ஒருங்கிணைப்பாளர்களும் பங்கேற்றனர்.*
*மாநில ஒருங்கிணைப்பாளர்கள்* *ஜாக்டோ ஜியோ*
No comments
Post a Comment