Header Ads

Header ADS

தமிழக பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகனின் பெயர் சூட்டப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


தமிழக பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகனின் பெயர் சூட்டப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 


திமுக மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை நிறுவப்பட்டு அந்த வளாகம் 'பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்' என அழைக்கப்படும் என்றும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருதும் வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவைப் போற்றும் வண்ணம் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்கென ரூபாய் 7500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டு, நடப்பு ஆண்டிற்கு சுமார் ரூபாய் 1400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.


அரசு எடுத்து வரும் பல்வேறு ஆசிரியர் மாணவர் நலன் சார்ந்த செயல்பாடுகளால் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து நடப்பு ஆண்டிலேயே பல்வேறு கட்டுமானத்திற்கும் மராமத்துப் பணிகளுக்கும் கூடுதலாக சுமார் 1400 கோடி ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள்.
இத்துடன், பேராசிரியர் அன்பழகன் அவர்களது நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் திருவுருவச்சிலை நிறுவப்படுவதுடன் அவ்வளாகம் “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்’’ என்றும் அழைக்கப்படும் 




No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.