Header Ads

Header ADS

தேர்தல் அறிக்கையில் 311 ஆவது அறிவிப்பை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் போராட்டம் அறிவிப்பு

தேர்தல் அறிக்கையில் 311 ஆவது அறிவிப்பை தமிழக முதல்வர் நிறைவேற்ற  வேண்டி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் போராட்டம் அறிவிப்பு

*"சம வேலைக்கு" "சம ஊதியம்".*

 திமுகவின் 311வது தேர்தல் அறிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்ற கோரிக்கை இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் பேட்டி.


திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர்1  டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில அளவிலான மாவட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் தலைமையில் இன்று நடைபெற்றது.
 இக்கூட்டத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாவட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது,

2009 க்கு பின்னர் நியமிக்கப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் சங்க வேறுபாடுகள் இன்றி போராட்டத்தில் கலந்து கொண்டு கடந்த 13 ஆண்டுகளாக வேதனையிலும் வறுமையிலும் வாடும் நமது ஒற்றை
 உயிர் கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

TRB நியமன ஆணையில் ஊதிய விகிதம் 4500- 125- 7000 என குறிக்கப்பட்டுள்ளது. பணி நியமன அழைப்பு கடிதத்தில் உள்ள ஊதியத்தையும் வழங்கவில்லை அதன் பின்னர் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு சுமார் மூன்று லட்சம் இடைநிலை
 ஆசிரியர்களை மிகக் கடினமான தகுதி தேர்வு எழுதி அதில் 14 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்றனர். தகுதியான ஆசிரியர்களுக்கு தகுதியான ஊதியமும் வழங்கப்படவில்லை. ஊதிய குழுவில் தவறு இழைக்கப்பட்ட பிற துறையினருக்கு ஒரு நபர் ஊதிய குழுவில் 36 பிரிவினருக்கும், 3 நபர் ஊதிய குழுவில் 24  பிரிவினருக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டது.

மேலும் சம வேலைக்கு சம ஊதியம் என
திமுகவின் 311வது தேர்தல் அறிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றி தர
 வேண்டும் என பணிவன்புடன்  கேட்டுக் கொள்கிறேன்  என கூறினார்.

தேர்தல் வாக்குறுதியில் அளித்த அனைத்து கோரிக்கைகளும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என முதல்வர் ஒவ்வொரு மேடையிலும் முழங்கி வருகிறார். அதனை நிறைவேற்ற கோரி கடந்த செப்டம்பர் மாதம் 11 ம் தேதி ஒரு நாள் அடையாள கவனயீர்ப்பு நினைவூட்டல் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மேலும் அரசிடம் பதில் ஏதும் இல்லாததால் தற்போது வருகின்ற டிசம்பர் மாதம் இரண்டாம் பருவ விடுமுறையில் மாணவர்களின் நலன் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் சென்னையில் உள்ள DPI வளாகத்தில்  மீண்டும் மிக கடுமையான அகிம்சை வழியிலான  உண்ணாவிரதப் போராட்டம் நடத்தலாம் என இன்று நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் வருகின்ற 2023 ம் ஆண்டு  ஏப்ரல் மாதம் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.