TATA Electronics Recruitment 2022 - டாடா நிறுவனத்தில் பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு: 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்.
டாடா நிறுவனத்தில் பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு: 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்.
TATA Electronics Recruitment 2022
2020,2021,2022-ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் கலந்து கொள்ளலாம்.
உலக புகழ்பெற்ற டாடா எலக்ட்ரானிக்ஸ் (Tata Electronics Pvt. Ltd.) நிறுவனத்தில் பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை முகாம் தமிழ்நாடு முழுவதும் 15.10.2022 முதல் 02.11.2022 வரை நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக நடைபெறும் இந்த முகாம் தொடா்ந்து 14 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில், 2020,2021,2022-ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுளளது.
பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்:
வேலைவாய்ப்பு விவரங்கள்:
பணியிடம்: இளநிலை தொழில் நிபுணர்கள்
டாடா தொழிச்சாலையின் இடம்: ஓசூர், அருகே தமிழ்நாடு
படிப்பு: 2020,2021,2022-ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி
துவக்கநிலை சம்பளம்: மாதாந்திர மொத்த சம்பளம் (CTC) 16,557/- மற்றும் போனஸ்
உயரம் மற்றும் எடை: 145 செமி, 43 கிலோ (குறைந்தபட்சம்) முதல் 65 கிலோ வரை (அதிகபட்சம்)
வேலைவாய்ப்புக்கான அத்தியாவசியப் பயிற்சி: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டு 12 நாள் தீவிர பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவர். இந்த அத்யாவசியப் பயிற்சித் தொகுப்பை வெற்றிகரமாக முடித்த பயிற்சியாளர்களுக்கு வேலை வாய்ப்பு நியமனக் கடிதங்கள் வழங்கப்படும்.
மேற்படிப்பிற்கான வாய்ப்புகள்: TEPL நிறுவனத்தில் ஒரு வருட அனுபவத்திற்குப் பிறகு இளநிலை (தயாரிப்பியல்) பட்டப்படிப்பில் சேரும் வாய்ப்பு
பணியாளர்க்கான நலத்திட்டங்கள்:
நிரந்தர வேலை வாய்ப்பு. வேறு ஒப்பந்தமோ, பத்திரமோ இல்லை
நம்பிக்கைக்குகந்த மற்றும் பாதுகாப்பான பணிச்சூழல்
தேலையான வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான தங்குமிடங்கள்
ஒழுங்குமுறைச் சட்டங்களுக்குட்பட்ட அனைத்து " நலத்திட்டங்கள் (PF/Gratuity/ESI போன்றவை) வழங்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு முகாம் நடக்கும் இடம் தேதி தொடர்பான விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு:
No comments
Post a Comment