234/77 திட்டத்தின் கீழ் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் & விரைவில் ஆசிரியர் கலந்தாய்வு மேற்கொள்ள நடவடிக்கை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!(பத்திரிக்கை செய்தி) Attached
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை & WWF-India முன்னெடுப்பில் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மிஷன் இயற்கை என்ற திட்டத்தை கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள ஈஸ்வரியம்மாள் பத்திரப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தோம்.
-மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி
பள்ளிக்கல்வித்துறை ஆய்வுப் பயணத் திட்டத்தில் 16 வது தொகுதியாக திரு.பொன்.ஜெயசீலன் MLA அவர்களின் கூடலூர் தொகுதி, பொக்காபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி&மசினகுடி அரசு மேல்நிலை பள்ளி, 17 வது தொகுதியாக திரு.R. கணேஷ் ராமன் MLA அவர்களின் ஊட்டி தொகுதி, வாழைத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள பழங்குடியின மாணவர்களுக்கான ஜி.ஆர்.ஜி நினைவு மேல்நிலைப் பள்ளி & உதகமண்டலம் பிரிக்ஸ் நினைவு ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மற்றும் தூனேரி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, 18 வது தொகுதியாக மாண்புமிகு அமைச்சர் கா.ராமசந்திரன் MLA அவர்களின் குன்னூர் தொகுதி,
கட்டபெட்டு அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ஆய்வுப் பயணத்தில் கற்றல் திறன் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு கோரிக்கைகளை கேட்டறிந்தோம்.
-மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி
234/77 திட்டத்தின் கீழ் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும்:- அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!* (பத்திரிக்கை செய்தி)
No comments
Post a Comment