பஞ்சாபில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் -முதல் மந்திரி அறிவிப்பு
பஞ்சாபில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் -முதல் மந்திரி அறிவிப்பு
பஞ்சாபில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவதாக முதல்
மந்திரி பகவந்த் மன் அறிவித்துள்ளார். அமிர்தசரஸ், பஞ்சாபில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநில மந்திரி சபை இந்த முடிவை மேற்கொண்டிருப்பதாக மாநில முதல் மந்திரி பகவந்த் மான் தனது
டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இன்று, பஞ்சாப் மந்திரி சபைக் கூட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது. இந்த முடிவுக்கு பஞ்சாப் மந்திரிசபை முதற்கட்டமாக அனுமதி வழங்கியுள்ளது. நாங்கள் சொல்வதை செய்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறுகையில் நமது மாநிலத்திலும் CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை செய்ய வேண்டும்... இதனால் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்... தொடர்ந்து cps க்கு எதிராக போராடுவோம்... என்று தெரிவித்தார்...
No comments
Post a Comment