ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் தமிழக முதல்வர் அறிவித்துள்ள அறிவிப்புக்கள்......
ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் மாண்புமிகு. தமிழக முதல்வர் அறிவித்துள்ள அறிவிப்புக்கள்......
1) தற்காலிக ஆசிரியர்கள் 60 ஆண்டுகள் வரை தொடர்ந்து பணிபுரியலாம்
2) அக்டோபர் 15 முதல் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்
3)101 அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது..
( G.O-151 - நாள் - 09.09.2022- ன் படி தொடக்கக்கல்வி தனியாக இயங்கும்
மாவட்டம் தோறும் பழைய முறையில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் நியமனம்
ஆங்கிலோ இந்தியன் தனி குடையின் கீழ் நீர்வகிப்படும்.
MATRICULATION பள்ளிகளுக்கு தனியாக கல்வி அதிகாரிகள் நிர்வகிப்பர்.
4)அரசு ஊழியர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கையெழுத்திட்டு வந்துள்ளேன். ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு.
5) நிதி நிலை சரியான பின்னர் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.
ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு:
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அமைந்ததற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்தான் காரணம்.
தனியார் பள்ளிகளை நிர்வகிக்க தனியாக மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.
தற்காலிக ஆசிரியர்கள் 60 வயது வரை பணி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்-ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.
அக்டோபர் 15ம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு, ஆன்லைன் மூலமாக வெளிப்படையாக நடக்கும்.
அரசு கருவூலத்தில் பல்லாயிரம் கோடிக்கு பணம் சேர்க்க வேண்டுமென்பது எங்கள் இலக்கு அல்ல நான் நினைக்கும் திட்டங்களை நிறைவேற்ற தேவையான பணம் இருந்தால்போதும் என்று நினைக்கிறோம்.
நீங்கள் தனி தீவு கிடையாது, நானும் உங்களில் ஒருவன்; நீங்கள் அரசு ஊழியர், நான் மக்கள் ஊழியன்.
அரசு ஊழியர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் பழிவாங்கப்பட்டார்கள்.
இந்த ஆட்சி உங்களால் உருவாக்கப்பட்டுள்ள ஆட்சி.
அரசு ஊழியர்களின் நம்பிக்கைக்கு எப்போதும் பாத்திரமாக இருப்பேன் - முதல்வர் ஸ்டாலின்.
No comments
Post a Comment