பி.காம் எனும் இளநிலை வணிகவியல்: இது படிச்சா இவ்வளவு வாய்ப்புகளா?
பி.காம் எனும் இளநிலை வணிகவியல்: இது படிச்சா இவ்வளவு வாய்ப்புகளா?
கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் மத்தியில் பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் படிப்படியாக குறைந்து அவர்களின் பார்வை கலை அறிவியல் படிப்புகள் மீது திரும்ப ஆரம்பித்துள்ளது. கலை அறிவியல் படிப்புகளில் கறிப்பாக பி.காம் போன்ற படிப்புகள் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.
இதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஐடி துறைகளிலும் பி.காம் தேவை
அதிகரித்திருப்பதே. பல ஐ.டி. நிறுவனங்கள், நிதிச்சேவைகள், தகவல் பாதுகாப்பு பிரிவுகளுக்கு பி.காம், பிபிஏ படித்தவர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து பணியமர்த்திக் கொள்கின்றன.
பி.காம் படித்தால் என்ன வேலை இருக்கு ?
பி.காம். படித்ததும் பல்வேறு துறைகளில் பணியாற்ற வாய்ப்பு ஏற்படுத்தித் தரக் கூடிய பட்ட மேற்படிப்புகள் உள்ளது. பி.காம். முதலாண்டு படிக்கும்போதே பட்ட மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு தயாராக வேண்டியது கட்டாயம். பி.காம். படித்ததும் எம்.காம்., பி.எட் படித்து ஆசிரியர் பணியிடத்துக்குக் கூட செல்லலாம். வங்கி, நிதி நிறுவனங்களிலும் இவர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
போட்டித் தேரிவுகளில் பி.காம்..! பி.காம்.
படிப்பவர்களுக்கு காலை, மாலை உள்ளிட்ட பல வசதியான நேரங்களில் கல்வி நிறுவனங்கள் மேற்படிப்புகளை வழங்குகின்றன. இதுபோன்ற வாய்ப்பை பயன்படுத்திஙக கொண்டால் போட்டித் தேர்வுகளுக்கும் தயாராக முடியும். அப்படிச் செய்தால் நல்ல நிறுவனங்களில் உயர் பதவியை எளிதில் அடையமுடியும். பி.காம். படித்து முடித்து எம்.பி.ஏ. படிப்பவர்களுக்கு பெரிய நிறுவனங்களில் பணி வாய்ப்பு அதிகம் உள்ளது.
உலக வங்கியில் பி.காம் மாணவர்கள்..!
தாய் மொழி மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பிற கூடுதல் மொழிகளையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர்களுக்கு உலக வங்கிகளிலும் வேலைவாய்ப்பு அதிகளவில் கிடைக்கிறது. பி.காம். படித்து முடித்தவர்கள் சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., செகரட்டரிஷிப் போன்ற படிப்புகளையும் தேர்வு செய்து படிக்கலாம். இதன்மூலம் பெரிய நிறுவனங்களில் உயர்ந்த பதவிக்கு செல்ல எளிமையான வழிகள் கிடைக்கும். இதற்கான முயற்சியை பி.காம். பட்டப்படிப்பில் சேர்ந்த முதலாண்டில் இருந்து தொடங்குவது கட்டாயமாகும்.
நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் பி.காம்.!
தற்போதுள்ள போட்டிகள் நிறைந்த உலகில் நிறுவனங்களுக்கு மட்டும் விதிவிலக்கில்லை. தங்களுடைய நிறுவனத்தின் விற்பனையை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. எனவே, பொருளை சந்தைப்படுத்துதல் துறையில் கூடுதல் பணி வாய்ப்புகள் பி.காம் மாணவர்களுக்கே உள்ளன. எனவே, மாஸ்டர் இன் ஃபைனான்சியல் மேனேஜ்மென்ட், மாஸ்டர் ஆஃப் மார்க்கெட்டிங் மேனேஜர், மாஸ்டர் இன் ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பி.காம் தொடர்புடைய மேற்படிப்புகளைப் படிப்பது நல்லது.
வங்கிகளை ஆட்டிப்படைக்கும் பி.காம்..!
கணினித் துறை சார்ந்த பணி வாய்ப்புகளுக்கு முயற்சி மேற்கொள்ளும் மாணவர்கள் எம்.சி.ஏ. பட்ட மேற்படிப்பை எவ்வித தயக்கமும் இன்றி தேர்வு செய்து படிக்கலாம். மாஸ்டர் இன் பேங்கிங் மேனேஜ்மென்ட் ஓராண்டு மற்றும் இரு ஆண்டு படிப்புகளாக வழங்கப்படுகிறது. பெரும்பாலான வங்கிகள் இத்துறையில் அனுபவம் மிக்கவர்களை வேலைக்கு தேர்வு செய்கிறது. இதைப் படிப்பதன்மூலம் வங்கி, நிதி நிறுவனங்களில் நல்ல பணி வாய்ப்பை பெற முடியும்.
உங்கள் கையில் பங்குச் சந்தை!
மாஸ்டர் இன் கேபிட்டல் மார்க்கெட் போன்ற பி.காம் தொடர்புடைய பட்ட மேற்படிப்பினை மும்பை பங்குச் சந்தை மூலம் வழங்கப்படுகிறது. இதற்கும் நல்ல எதிர்காலம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. காப்பீட்டுத் துறை சார்ந்த பணி வாய்ப்புக்கு செல்ல விரும்புபவர்கள் காப்பீட்டு மேலாண்மை, ஹெல்த் மேனேஜ்மென்ட், ரிஸ்க் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளைப் படிக்கலாம்.
பி.காம்., படிக்க என்ன தகுதிகள் தேவை !
மூன்று ஆண்டு படிப்பான இதை படிக்க 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். இந்த படிப்பு வணிகவியலில் ஒரு ஆழமான அறிவை புகட்டும். இந்தவகையான படிப்பை கல்லூரியில் சென்று படிக்கலாம் அல்லது தொலைதூரக் கல்வி மூலம் வீட்டில் இருந்தே கூட படிக்கலாம்.
வளமான வாழ்வு நிச்சயம்..!
அனைத்துத் துறைகளிலுமே வேலை வாய்ப்புகள் உள்ளது. அவற்றில், பி.காம். என்பது மிகவும் சாதகமான ஓர் அம்சமாக தற்போது உருபெற்றுள்ளது. பி.காம். படிப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான துறையைத் தேர்வு செய்து மேற்படிப்பு மேற்கொண்டால் வளமான வேலை வாய்ப்பைப் பெறலாம்.
வணிகம் அல்லது வர்த்தகம் (trade, commerce) என்பது மனிதனது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் இலாப நோக்குடைய அல்லது இலாப நோக்கற்ற ஒரு பொருளாதாரச் செயற்பாடு ஆகும்.
#AKV #அடியற்கை கல்வி வழிகாட்டி
No comments
Post a Comment