Header Ads

Header ADS

தபால் துறையில் 399 ரூபாயில் 10 லட்சம் விபத்து காப்பீடு

தபால் துறையின் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி ரூபாய் 399-ல் 10 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது


ஏழை மக்களுக்கும் காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில் நாடு முழுவதும் உள்ள தபால்காரர் கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலம் மிகக் குறைந்த பிரீமியம் தொகையுடன் கூடிய டாட்டா ஏஐஜி குழு விபத்து காப்பீடு என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில் 18 முதல் 65 வயது உள்ளவர்கள் சேரலாம் தங்கள் பகுதியில் உள்ள தபால்காரர் மூலம் விரல் ரேகையை பதிவு செய்து ரூபாய் 399 செலுத்தி ஐந்து நிமிடங்களில் காப்பீட்டு திட்டத்தில் இணையலாம்.


விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு நிரந்தர முழு ஊனம் பகுதி ஊனம் பக்கவாதம் ஏற்பட்டால் 10 லட்சம் 


விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூபாய் 60 ஆயிரம் 

புற நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் 30,000 


விபத்தில் மரணம் பக்க வாதம் ஏற்பட்டவர்களின் குழந்தைகளின் அதிகபட்சம் இரண்டு குழந்தைகள் கல்விச் செலவுக்கு ஒரு லட்சம் வரை வழங்கப்படும்


விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு தினப்படி தொகையாக ரூபாய் 1000 (9 நாட்களுக்கு)



விபத்தில் பாதிக்கப்பட்ட வரை பார்க்கச் செல்லும் குடும்பத்தினரின் பயண செலவுகளுக்கு அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய் 



விபத்தில் ஒருவர் உயிரிழக்க நேரிட்டால் ஈமச்சடங்கு செய்ய ரூபாய் 5000 வரை வழங்கப்படும்


தபால் துறை அதிகாரிகள் கூறுகையில் விபத்து காப்பீட்டு திட்டத்தில் இணைவதன் மூலம் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உடல் நலம் நிதி நெருக்கடிகளையும் உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்யலாம் என்றார



No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.