Header Ads

Header ADS

இன்று நடைபெற்ற தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்களுடனான தொடக்க கல்வி இயக்குநர் மற்றும் உதவிஇயக்குநர் அவர்களுடனான சந்திப்பு - சார்ந்து செய்தி

இன்று நடைபெற்ற தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்களுடனான தொடக்க கல்வி இயக்குநர் மற்றும் உதவிஇயக்குநர் அவர்களுடனான சந்திப்பு நல்லமுறையில் நடந்தது.


இயக்குநர் அவர்கள் கீழ்க்கண்ட நடைமுறை மாற்றங்களை செய்வதாக அறிவித்தார்கள்.


 1. எண்ணும் எழுத்தும் என்ற புது முறை கற்பித்தலை ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலை இலகுவாக்கும் அருமையான திட்டம் ...அதோடு இதை அரசிடம் ஏற்கனவே பரிந்துரைத்து அனுமதி பெற்றுவிட்டதாலும், மாண்புமிகு.முதல்வர் அவர்கள் வரும் 13 ந்தேதி துவக்கி வைக்க இருப்பதாலும், இந்த கல்வியாண்டு பள்ளி துவங்கும் முதல் நாளான 13 ஆம் தேதியே நாம் புது வழி முறைகளை கையாள வேண்டும் என்பதாலும் விடுமுறை நாட்களில் நடத்தப்படும் பயிற்சியை ரத்து செய்ய இயலாத நிலை உள்ளது*என்றும் இப்பயிற்சி நாட்களுக்கானஈடு செய்யும் விடுப்பை வழங்க தான் ஆவன செய்ததாகவும்...இனி வரும் காலங்களில் இது போல் விடுமுறை நாட்களில் பயிற்சி நடத்தப்படாது எனவும் கூறினார்கள்.


2. குறுவள மைய பயிற்சிக்கு செல்லும் 7 நாட்களும், மொத்த பள்ளி வேலை நாட்களில்(210) சேர்த்துக்கொள்ளப்படும் என்று கூறினார்கள்.


3. பள்ளிகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடாமல் ஒரே மாதிரியான குறைந்த எண்ணிக்கை இருக்குமாறு உரிய சுற்றறிக்கை விரைவில் அனுப்பப்படும்

 ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு வகையான பதிவேடுகள் பராமரிக்க அதிகாரிகளால் நிர்பந்தப்படுத்தப்படுகிறோம் . இதனால் கற்பித்தல் பணி பாதிக்கிறது என்ற வருத்தத்தை சங்கங்கள் பதிவு செய்தன.இனிமேல் மாநிலம் முழுவதுக்குமான ஒரே மாதிரியான பதிவேடுகள் பராமரிக்க இயக்குனரே ஒரு நெறிமுறை உத்தரவிடுவதாகவும், அதை தாண்டி வேறு எந்த பதிவேடுகளையும் ஆசிரியர்கள் பராமரிக்க தேவையில்லை எனவும் கூறினார்கள்.


4.EMIS பதிவேற்றம் பற்றி அனைவரும் ஆட்சேபித்த வகையில் எதிர்காலத்தில் முற்றிலும் தவிர்க்கப்பட்டு ஆசிரியர்களுக்கு எளிய நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்தார்கள்.



5. ஆசிரியர்களை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுக்கு வற்புறுத்தாமல் கற்பித்தல் பணிக்கு மட்டுமே உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று வரும் காலங்களில் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் நேரடியாக பள்ளியிலேயே கிடைக்கச் செய்வதற்கு வழிவகை செய்வதாக உறுதியளித்தார்கள்.



6.இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்த விரிவான விவர அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது விரைவில் சரி செய்யப்படும்.


7.சில மாவட்டங்களில் அடிப்படை ஊதியம் 65000த்தை கடந்த நிலையில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும் முறையை ரத்து செய்து ஒவ்வொரு ஆண்டும் ஊதிய உயர்வு கிடைக்க வழிவகை செய்வதாக கூறினார்கள்.


9.தமிழகத்தில் மொத்தம் 669 பள்ளிகளில் ஓரிலக்க எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளதால் அதனை ஈரிலக்க எண்ணிக்கையில் தரம் உயர்த்தி ஆசிரியர்கள் நிரவலை தடுக்க விளையும்படியும், இந்த வருடம் மாணவர்கள் சேர்க்கையை அதிகபடுத்த எதிர்வரும் 14.06.22 மாநிலம் முழுவதும் smc, pta மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து மாணவர் சேர்க்கைப் பேரணி நடத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்கள்.


10.ஆசிரியர் தேவை பணியிடத்திற்கு மாறுதல் செய்யப்பட்டு ஊதியம் வராத ஆசிரியர்களுக்கு பத்தே நாட்களில் ஊதியம் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.


11. உடனடியாக 7500 நடுநிலைப்பள்ளிகளுக்கு கணினி ஆய்வகம் வழங்கப்படும்.இதனைத்தொடர்ந்து படிப்படியாக எதிர்காலத்தில் தொடக்க பள்ளிகளுக்கும் மடி கணினி வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்கள்.


மொத்தத்தில் இயக்குனர் அவர்கள் தாயுள்ளத்தோடு பொறுமையாக அனைத்து சங்கங்களின் பொறுப்பாளர்களின் கோரிக்கைகளுக்கும், ஆதங்கங்களுக்கும், கொந்தளிப்புக்கும் மதிப்பளித்து பொறுமையுடன் விளக்கம் அளித்தார்கள்*.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.