pay matrixன் level 10ல், Pay cell 1 ஆனது குறைந்தபட்ச ஊதியம் ரூ.20,600 என தொடங்கி, 40 வது Paycell ஆனது அதிகபட்ச ஊதியமாக ரூ.65,500 என முடிவுறும்படி கீழ்கண்டவாறு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, May 24, 2022

pay matrixன் level 10ல், Pay cell 1 ஆனது குறைந்தபட்ச ஊதியம் ரூ.20,600 என தொடங்கி, 40 வது Paycell ஆனது அதிகபட்ச ஊதியமாக ரூ.65,500 என முடிவுறும்படி கீழ்கண்டவாறு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

 

*🌹தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சுற்றறிக்கை!🌹*


இடைநிலை ஆசிரியர்களுக்கு புதிய ஊதிய குழு - 2017 அரசாணை எண் 303 நிதித்துறைய நாள் 11.10.2017ன் பக்கம் 21ன் Schedule-111ல், 1 முதல் 40வரை கொடுக்கப்பட்ட Pay cellல்(ஊதிய தளம்), 40வது Pay cellஐ, பணியில் மூத்த ஆசிரியர்கள் விரைவில் அடைந்து, பெரும் ஊதிய இழப்பை பெற்றதன் காரணமாக, அவ்வூதிய இழப்பை தடுக்கும் விதமாக, அரசால் அரசாணை எண் 303 நிதித்துறைய நாள் 11.10.2017ல், திருத்தம் (Amendment) ஆணையாக வெளிவந்துள்ள அரசாணை எண் 90 நிதி நாள் 26.02.2021ஐ பற்றிய ஒரு விளக்கத்தை தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக தருகின்றோம். 


    புதிய ஊதியக்குழு -2017 அரசாணை எண் 303 நிதித்துறை நாள் 11.10.2017ல் இடைநிலை ஆசிரியர்களுக்காக பக்கம் 21ல் வழங்கப்பட்டுள்ள schedule-3ல் உள்ள 

pay matrixன் level 10ல், Pay cell 1 ஆனது குறைந்தபட்ச ஊதியம் ரூ.20,600 என தொடங்கி, 40 வது Paycell ஆனது அதிகபட்ச ஊதியமாக ரூ.65,500 என முடிவுறும்படி கீழ்கண்டவாறு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 


மேலும் அரசாணை 303ன் பக்கம் 19ல் ல் உள்ள schedule-1ல், 1முதல் 32வரை Pay level வழங்கப்பட்டு, 1வது Pay level க்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.15700 எனவும், 32வது Pay level க்கு அதிகபட்ச ஊதியம் ரூ.2,25,000ம் எனவும் கீழ்கண்டவாறு நிர்ணயிக்கப்பட்டிருந்தது., 

 


 

இந்நிலையில் சில மூத்த இடைநிலை ஆசிரியர்களின் ஊதியமானது, அரசாணை 303 நாள் 11.10.2017 - Schedule-3ல் அதிகபட்ச ஊதியமாக Pay cell 40ல் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியம் ரூபாய் 65,500ஐ விரைவாக அடைந்துவிடுவதால், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேக்க ஊதிய உயர்வு பெறும் நிலை ஏற்பட்டது.

     அனைத்து ஆசிரிய இயக்கங்களும், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களும் அரசுக்கு இது குறித்து கோரிக்கை வைக்கவே, அரசு இதனை பரிசீலித்து புதிய ஊதிய குழு -2017 அரசாணை எண் 303 நிதி நாள் 11.10.2017ல் பக்கம் 19 மற்றும் 21ல் கொடுக்கப்பட்ட Schedule l & 3 க்கு பதிலாக திருத்த schedule ஒன்றை, அரசாணை எண் 90 நிதித்துறை நாள் 26.02. 2021 மூலமாக வெளியிட்டது.              
      அதில் Schedule-3ல் அரசாணை 303ல் Pay cell (ஊதிய தளம்) 40 ஆக இருந்ததை ரத்து செய்து, கூடுதலாக 5 pay cellஐ சேர்த்து 45 ஆக உயர்த்தி, இடைநிலை ஆசிரியர்களின் Pay cellன் அதிகபட்ச ஊதியம் ரூபாய் 65500 என்று இருந்ததை ரூபாய் 75900ம்ஆக மாற்றி அமைத்து, வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வினை பெற, தெளிவான amendment Schedule- 3ஐ அரசு கீழ்கண்டவாறு வெளியிட்டது.

         4. *"After careful examination, the government has decided to accept the above recommondation made by the one man committee accordingly the government direct that the schedule l and lll containing the pay matrix for employees pay appended to this order shall be substituted for the schedule l and lll in the government order first read above."*
(இதில் government order first read above என்பது எனாபது அரசாணை எண் 303 நிதி நாள் 11.10.2017ஐ குறிக்கும். அரசாணை எண் 90 நிதி நாள் 26.02.2021ன் பார்வையில் குறிக்கப்பட்ட ஆணைகளை பார்த்தால் இது நனகு புலப்படும்.)
 

மேலும் அரசாணை 303 நிதித்துறை நாள் 11.10.2017ன் பக்கம் 19ல் உள்ள schedule-1ல், 1 முதல் 32 வரை Pay level வழங்கப்பட்டு, Pay level 1க்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.15700 எனவும், 32வது Pay level க்கு அதிகபட்ச ஊதியம் ரூ.2,25,000 என நிர்ணயிக்கப்பட்டிருந்ததை,
அரசாணை எண் 90 நிதித்துறை நாள் 26.02.2021 மூலம் திருத்தம் செய்து, திருத்தம் செய்த schedule-1ல், Pay level 1க்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.15700மும், 32வது Pay level க்கு அதிகபட்ச ஊதியம் ரூ.2,61,000ம் எனவும் உயர்த்தி, கீழ்கண்டவாறு மாற்றியமைக்கப்பட்டது.

        5. *"In the pay matrix the minimum pay at level -1 is Rs. 15700 and maximum pay at level 32 is Rs. 2,61,000 in respect of employees on time scale of pay,"* 





மேலும் இவ்வரசாணை எண் 90 நாள் 26.02.2021 வெளியிடப்பட்ட நாளிலிருந்து புதிய ஊதிய குழு 2017 அரசாணை எண் 303 நிதி நாள் 11.10.2017ன் பக்கம் 19 மற்றும் பக்கம் 21ல் வெளியிடப்பட்ட schedule 1 and 2தானாக நீர்த்துப்போய் ரத்து செய்யப்பட்டு விடும். அதை தற்போது பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தவும் முடியாது. அரசாணை 90 நாள் 26.02.2021ல் வெளியிடப்பட்ட schedule-3ன் Pay cellஐ மட்டுமே இனி நாம் பயன்படுத்த முடியும் என்பதே இதன் விளக்கமாகும்.

     ஆனால் ஆசிரியர்களுக்குரிய நியாயமானபணப்பலன்களுக்கு தடங்கல்கள ஏற்படுத்தும் விதமாக சில வடடாரக்கல்வி அலுவலர்கள், அரசாணைகளில் உள்ள சரியான தமிழாக்கத்தை புரிந்துகொள்ளாததன் காரணமாக, அரசாணை எண் 90 நிதித்துறை நாள் 26.02.2021ல் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ள 5 ஊதிய தளமும் (Pay cell) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேக்க ஊதிய உயர்வு வழங்குவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனக் கூறி, ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வுகளை அளிக்காது வதை செய்து வருகின்றனர். இன்னும் ஒருசில வட்டாரக்கல்வி அலுவலர்கள், அரசாணைக்கு முரணாக இராஜபாளையம் வட்டாரக்கல்வி அலுவலரால் அரசாணையைப்பற்றிய புரிதலின்றி போடப்பட்டுள்ள செயல்முறையை சுட்டிக்காட்டி, இவ்வட்டாரக்கல்வி அலுவலரின் செயல்முறையால், அரசாணை 90 நாள் 26.02.2021 செயலிழந்து விட்டதாக கூறி, ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வினை வழங்காமலும், வழங்கப்பட்டுள்ள ஊதியத்தினை பிடித்தம் செய்தும் ஆசிரியர்களை வதை செய்து வருகின்றனர். 

      தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஒன்றிய வட்டாரக்கல்வி அலுவலரும், மேற்கண்ட இராஜபாளையம் வட்டாரக்கல்வி அலுவலரின் செயல்முறையை சுட்டிக்காட்டி, இவ்வட்டாரக்கல்வி அலுவலரின் செயல்முறையால், அரசாணை 90 நாள் 26.02.2021 செயலிழந்து விட்டதாக கூறி, ஆழ்வார்திருநகரி ஒன்றிய ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வினை வழங்காமல் வதை செய்து வருகின்றார்கள்.

    அதிலும் சில நேர்மையான வட்டாரக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர்களின் நேர்மையான பணப்பலன்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, இதுகுறித்து தொடக்கக்க்கல்வி இயக்குனர் அவர்களிடமே நேரில் விளக்கம் கேட்டு, ஆண்டு ஊதியஉயர்வுகளை அனுமதித்துள்ளனர். இவர்களை மன்றத்தின் சார்பில் வாழ்த்தி வரவேற்கின்றோம்.

    எனவே நேர்மையாக நிர்வாகம் செய்து ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டு வரும் தூத்துக்குடி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு அரசாணை 90 நிதித்துறை நாள் 20.02.2021ன் amendment shedule -1 & 3ஐ பயன்படுத்தி, ஆசிரியர்களுக்கு உடனடியாக ஆண்டு ஊதிய உயர்வினை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி தூத்துக்குடி மாவட்ட மன்றம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
      
தகவல்
               சா.ஜாண்சன்,
       மாவட்டச் செயலாளர்  
      தமிழ்நாடு தொடக்கப்பள்ளி 
               ஆசிரியர் மன்றம்,
            தூத்துக்குடி மாவட்டம். 






No comments: