பழைய பென்ஷன் திட்டம் வலியுறுத்தி லட்சம் பேர் கோட்டை நோக்கி பேரணி அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அறிவிப்பு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, May 9, 2022

பழைய பென்ஷன் திட்டம் வலியுறுத்தி லட்சம் பேர் கோட்டை நோக்கி பேரணி அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அறிவிப்பு

பழைய பென்ஷன் திட்டம் வலியுறுத்தி லட்சம் பேர் கோட்டை நோக்கி பேரணி அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. இதில் , தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது : தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்துவது சாத்தியமில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

 இது அரசு ஊழியர்களுக்கு கோபம் , வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நிதி அமைச்சரின் அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும் , திமுக தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் வரும் மே 9ம் தேதி , தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் தமிழக அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் ஜூன் 3 வது வாரத்தில் தமிழகத் தின் 7 முனைகளிலிருந்து வாகன பிரசாரம் செய்யப்படும். தொடர்ந்து , ஜூலை 2 ம் தேதி கோரிக்கை முழக்க கருத்தரங்கங்கள் மாவட்ட தலை நகரங்களில் நடத்தப்ப டும். ஜூலை 3 வது வாரத்தில் மாவட்ட தலைநகரங்களில் தர்ண நடத்தப்படும். ஆகஸ்ட் 3 வது வாரத்தில் லட்சம் பேர் பங்கேற்கும் கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்படும் என கூறினார். நடப்பு சட்டசபை தொடரில் , திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்கு றுதியின்படி பழைய பென்ஷன் திட்டம் உட்பட நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு கூறினார்.


No comments: