"பொதுத் தேர்வு எழுதும் பொழுது மாஸ்க் கட்டாயம் கிடையாது" - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
முன்கூட்டியே கோடை விடுமுறையா? தேர்வுகளை விரைந்து முடிக்க திட்டம்!
சென்னை:
கத்திரி வெயில் நாளை துவங்க
உள்ள நிலையில், ஒன்று முதல் 5ம்
வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி தேர்வை
விரைந்து முடித்து, முன்கூட்டியே விடுமுறை விட, பள்ளிக்கல்வி துறை
ஆலோசித்து உள்ளது.
தமிழகத்தில்,
நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள்,
கொரோனா ஊரடங்கால் வழக்கத்தை விட மூன்று மாதங்கள்
தாமதமாக துவங்கின; விடுமுறையும் கூடுதல் நாட்கள் அளிக்கப்பட்டது.
இதனால், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டு, மாணவர்களின்
கற்றலில் பின்னடைவு ஏற்பட்டது. இதை சமாளிக்க, இந்த
ஆண்டு மட்டும் இம்மாதம் 12ம்
தேதி வரை பள்ளிகளை நடத்த,
பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டது.
கடந்த ஒரு வாரமாக மாநிலம்
முழுதும், கோடை வெயில் அதிகரித்துள்ள
நிலையில், நாளை முதல் கத்திரி
வெயில் துவங்க உள்ளது. இதனால்,
வெயிலின் உக்கிரம் இன்னும் அதிகரிக்கும் என்று
அஞ்சப்படுகிறது. எனவே, பள்ளி மாணவர்களுக்கு,
விரைவில் தேர்வை முடித்து, கோடை
விடுமுறையை முன் கூட்டியே விடலாமா
என, பள்ளிக்கல்வி அலுவலர்கள் ஆலோசித்துள்ளனர்.
இதன்படி,
ஒன்று முதல் 5ம் வகுப்பு
வரையிலான மாணவர்களுக்கு மட்டும், இந்த வாரத்துடன் பள்ளி
வேலை நாட்களை முடித்து கொள்ளலாமா
என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆனால், திடீரென அறிவித்தால்,
மாணவர்களுக்கான கற்றல் திறனை அறியும்
ஆண்டு இறுதி தேர்வுகளை நடத்த
முடியாத சூழல் ஏற்படும் என,
பள்ளிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. விடுப்பு குறித்து, பள்ளிக்கல்வி துறை விரைவில் அறிவிப்பு
வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
No comments
Post a Comment