18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மே 18-ஆம் தேதி நடைபெற இருந்த டிட்டோஜாக் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு..
இன்று நடந்த அமைச்சர் உடனான சந்திப்புக்குப் பிறகு
இடைநிலை ஆசிரியர் பிரச்சனை குறித்து விரைவில் தீர்வு காணப்படும்.
அனைத்து கோரிக்கைகள் குறித்து நாளையே முதலமைச்சர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு இது குறித்து தெளிவாக பேசி தீர்வு காணப்படும்.
தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மே 18-ஆம் தேதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் டிட்டோஜாக் மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து இன்று (15.5.22) திருச்சியில் கலந்தாலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் 101, 108 அரசாணைகள் ரத்து உள்ளிட்ட ஒரு சில கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாகவும்,
நிதி சார்ந்த கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் தெரிவித்து, போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து டிட்டோஜாக் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதில் அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து எடுத்த முடிவின் அடிப்படையில், மே 18ஆம் தேதி நடைபெற இருந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஒத்தி வைப்பதாக முடிவு எடுக்கப்பட்டது
குறிப்பிட்ட கால அவகாசத்திற்குப் பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் டிட்டோஜாக் மூலம் தீவிர போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப் பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் போராட்ட ஆயத்த கூட்டங்களை நடத்திய கூட்டணி நிர்வாகிகளுக்கு நன்றியினை தெரிவிக்கப் பட்டது
No comments
Post a Comment