CPS-ஐ ஒழிக்க சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டி சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு!-PHOTOS
பெறுநர்
:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
சென்னை - 600 009
பொருள்
: தேர்தல் வாக்குறுதிப்படி CPS திட்டத்தை இரத்து செய்து, பழைய
ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டுதல் தொடர்பாக.
பெருமதிப்பிற்குரிய
அய்யா,
வணக்கம்.
இந்திய ஒன்றியத்தின் முன்னோடி முதலமைச்சராகத் திகழும் தாங்கள் தேர்தல்
வாக்குறுதியில் உறுதியளித்தவாறு, பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை (CPS) இரத்து செய்துவிட்டு, மீண்டும்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுகிறேன்.
முன்னதாக,
இராஜஸ்தான், சட்டீஸ்கர் & ஜார்கண்ட் மாநில முதலமைச்சர்கள் புதிய
ஓய்வூதியத் திட்டத்தை (NPS) ரத்து
செய்து விட்டு, மீண்டும் பழைய
ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளனர் என்றாலும்,
நாட்டிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டு மாதிரியை உருவாக்கிச் செயல்பட்டு வரும் தாங்கள், இதிலும்
மற்றவர்களுக்கு முன்னோடியாக நடப்புச் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே CPS-ஐ இரத்து செய்து
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றி அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின்
பணிஓய்வுக்கால வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டுமாறு வேண்டிக்
கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி!
CPS-ஐ ஒழிக்க சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டி சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு!-PHOTOS
தமிழ்நாட்டில்
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறை படுத்துவதற்காக, நடப்புச்
சட்டமன்றக் கூட்டத் தொடரில் சிறப்புக்
கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகளை
நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கும் பணியை CPS ஒழிப்பு இயக்க மாநில
மையம் மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு கட்டமாக இன்று
(21.04.2022),
👉 பாட்டாளி மக்கள்
கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் திரு.ஜி.கே.மணி,
👉 மறுமலர்ச்சித் திராவிட
முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கொறடா டாக்டர்.சதன்
திருமலைக்குமார்,
👉 இந்திய கம்யூனிஸ்ட்
(மார்க்சிஸ்ட்) கட்சியின் சட்டமன்றக் கொறடா திரு.நாகை
மாலி,
👉 இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.மாரிமுத்து
👉 அஇஅதிமுக-வின்
சட்டமன்றக் கொறடா திரு.எஸ்.பி. வேலுமணி
👉 விடுதலைச் சிறுத்தைகள்
கட்சியின் சட்டமன்றக் கொறடா திரு. சிந்தனைச்செல்வன்
👉 மனித நேய
மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.அப்துல் சமது
👉 கொங்குநாடு மக்கள்
தேசிய கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.ஆர்.ஈஸ்வரன்
உள்ளிட்டோரை
நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தோழமையுடன்,
மாநில ஒருங்கிணைப்பாள்கள்
மு.செல்வகுமார்
சு.ஜெயராஜராஜேஸ்வரன்
பி.பிரெடெரிக் எங்கெல்ஸ்
மாநில நிதிக் காப்பாளர்
சி.ஜான் லியோ சகாயராஜ்
CPS ஒழிப்பு
இயக்கம்
மாநில மையம்
No comments
Post a Comment