Header Ads

Header ADS

இன்று (11.04.2022) கல்வி மானிய கோரிக்கை நடைபெற உள்ள நிலையில் 2009 & TET நிர்வாகிகள் - அமைச்சர் திடீர் சந்திப்பு!

இன்று (11.04.2022) கல்வி மானிய கோரிக்கை நடைபெற உள்ள நிலையில் 2009 & TET நிர்வாகிகள் - அமைச்சர்  திடீர் சந்திப்பு!

 

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (10.04.2022) எதிர்பாராத விதமாக திடீரென்று அமைச்சரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததை அடுத்து மாவட்ட நிர்வாகி மற்றும் அருகாமையில் உள்ள நமது 2009& TET ஆசிரியர்களோடு மாண்புமிகு சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் உயர்திரு.K.S மஸ்தான் அவர்களை அவர்களது இல்லதிலேயே  சந்தித்து நமது ஊதியம் சார்ந்த கோரிக்கை சம்பந்தமாக முழு விவரம் அடங்கிய கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

 

இச்சந்திப்பில் சுமார் 20 நிமிடங்கள் பேசுவதற்கு  வாய்ப்பு கிடைத்ததால் நமது கடந்தகால போராட்டங்களைப் பற்றியும்  நமது சமவேலை சம ஊதியம் சார்ந்த  ஊதிய முரண்பாடு  பற்றியும் 2009 முதல் தற்போதுவரை அதனால் ஏற்பட்ட ஊதிய பாதிப்புகள் பற்றியும் முழு விவரத்தையும் அமைச்சர் அவர்களுக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது.

 

கடந்த காலத்தில் இரண்டு தொடர் போராட்டங்களுக்கு தற்போதைய முதல்வர் அவர்கள் போராட்டத்திற்கு வருகை தந்து நமக்கு ஆதரவையும் அளித்ததையும் எடுத்துக் கூறப்பட்டது . அதை தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியில் 311 வது கோரிக்கையாக தற்போது உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

இதை நன்கு கூர்ந்து கேட்டதோடு மட்டுமல்லாமல் கோரிக்கை மனுவில் உள்ள அனைத்து தகவல்களையும் அவராக படித்துப்பார்த்து அதன்பின் அமைச்சர் அவர்கள் தங்கள் துறைசார்ந்த அமைச்சருக்கு தெரியப்படுத்துவது மட்டுமல்லாமல் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் கண்டிப்பாக தொடர்புகொண்டு உங்களின் ஊதிய முரண்பாடு சார்ந்து  உதவி செய்வேன் என்றும் கூறினார். மேலும் நாளை பள்ளி கல்வித்துறை மானியக்கோரிக்கை நடைபெற இருப்பதால் தாங்கள் (எங்களை) காலையில் நினைவூட்டல் செய்தல் வேண்டும் என்றும் கூறினார்.

 

திடீர் சந்திப்பிற்காக தொலைபேசி வாயிலாக அழைத்த உடன் ஆவலோடு எம்முடன் வருகை தந்த 2009 & TET நமது ஆசிரியர்களுக்கும் முதலில் நான் நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளேன்.


திட்டமிடலோடு செயல்பட்டிருந்தால் விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் அனைவரையும் அழைத்திருக்கலாம். ஆனால் திடீர் என நிகழ்ந்த சந்திப்பு ஆகையால் அருகாமையில் உள்ள ஆசிரியர்களை மட்டும் அழைக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்

 

2009 & TET - விழுப்புரம் மாவட்டம்.




No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.