Header Ads

Header ADS

CPS ஒழிப்பு இயக்கம்- மாநில மையம் மாநில மையம் எடுத்த முடிவின் படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி அரசியல் கட்சி தலைவர்களை சந்திப்புகள்


CPS ஒழிப்பு இயக்கம்

மாநில மையம்


இன்றைய சந்திப்புகள்


மாநில மையம் எடுத்த முடிவின் படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி


 அரசியல் கட்சி தலைவர்களை சந்திப்பது என்ற அடிப்படையில்


 இன்று 03.03.2022


 மதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் திரு. துரை. வைகோ அவர்களையும்


 நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவருமான திரு. தொல். திருமாவளவன் அவர்களையும்


 மக்கள் நீதி மையத்தின் மாநிலச் செயலாளர் திரு. சிவ.இளங்கோ அவர்களையும்,


 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக் குழு செயலாளர் திரு முத்தரசன் அவர்களையும்,


 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. T.K ரங்கராஜன் அவர்களையும்,


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பலராமன் அவர்களையும்,


 சந்தித்து CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெறுகின்ற கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவளிக்க கோரியும்,


 வருகின்ற 25ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பேரணிக்கு ஆதரவு வழங்கக் கோரியும்


 மேற்கண்ட தலைவர்களை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிதி காப்பாளர் ஆகியோர் சந்தித்தித்து ஆதரவு கோரினோம்.

 















No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.