கனமழை காரணமாக (12.02.2022) இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
12 மாவட்டங்களுக்கு
இன்று கனமழை எச்சரிக்கை
சென்னை
: தமிழகத்தில் 12 மாவட்டங்களில், இன்று (பிப்.,12) கன
மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு
மையம் அறிவித்துள்ளது.
சென்னை
வானிலை ஆய்வு மைய இயக்குனர்
செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மன்னார் வளைகுடா பகுதியில், வளிமண்டல
மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால்,
தமிழகத்தில் வரும் 15ம் தேதி
வரை பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய
வாய்ப்புள்ளது.
மதுரை,
சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னி யாகுமரி, நாகை,
மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 12 மாவட்டங்கள் மற்றும்
காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று
கன மழை பெய்யும்.கடலுார்,
புதுக்கோட்டை மாவட்டங்களில், சில இடங்களில் இன்று
மிதமான மழை பெய்யும்.
தென் கடலோர மாவட்டங்களில், 13 முதல்
15ம் தேதி வரை மிதமான
மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும்
வறண்ட வானிலை நிலவும்.மன்னார்
வளைகுடா மற்றும் குமரி கடல்
பகுதிகளில், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில்
சூறாவளி காற்று வீசும். எனவே,
மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல
வேண்டாம்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
No comments
Post a Comment