Promotion clarification
தற்போது நடைபெறும் கலந்தாய்வில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்டிப்பாக பதவி இறக்கம் செய்யப்படுவார்கள் என உள்நோக்கத்துடன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களைக் குழப்புவதற்காக வாட்சப்பில் பகிரப்படும் பதிவிற்கான விளக்கம்.
School Education - Special Rules for the Tamilnadu Elementary Education Subordinate Service என்ற நிலையில் அரசிதழில் 30.01.2020 ல் வெளியான அரசாணை 12 ல் நடுநிலைப்பள்ளி த.ஆ. நியமனத்திற்கு குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைப் பார்ப்போம்.
இதில் Class II ல் பட்டதாரி ஆசிரியர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
Class III ல் இரண்டு category உள்ளது. அதில் category I - ல் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமனத்திற்கு, Class II - ல் பட்டதாரிகள் மற்றும் Class III - ல் Category I - ல் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இணைந்த ஒருங்கிணைந்த பணிமூப்பு ( Combined Seniority) என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே தற்போது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்றால் பதவி இறக்கம் செய்யப்படுவார்கள் என பரப்பப்படும் செய்தி உள்நோக்கத்துடன் கூடிய வதந்தீ.... யாரும் குழப்பமடைய வேண்டாம்.
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் குழப்பமடைந்து, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வாய்ப்பை தவறவிட்டால், அப்போது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை பெற்றுவிடலாம் என குறுக்குவழியில் செல்ல நினைத்தவர்களின் தயாரிப்பே இந்த தொ.ப. த.ஆ. பதவி இறக்கம் செய்யப்படுவார்கள் என்ற வதந்திப் பகிர்வு. யாரும் குழப்பமடைய வேண்டாம்.
குழப்புகிறவர்களுக்கும் ஒரு தகவல். இதுபோல குழப்பாமல் உங்களது கோரிக்கையை முறையாக கொண்டு செல்லுங்கள். அரசாணை 12 என உங்கள் பதிவுகளில் குறிப்பிட்டுக் கொண்டு, பொருத்தமற்ற தகவல்களால் குழப்பாதீர்கள்.
இறுதியாக வெளிவந்த அரசாணையே இறுதியானது. மேலும் அரசாணை 12 என்பது school Education சார்ந்து வெளியிடப்பட்டுள்ள அரசாணை. அதில் combined seniority என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் தொகுப்பு
C. THOMAS ROCKLAND.
No comments
Post a Comment