Primary_ Middle and High School Teachers Traing for Learning Outcomes_ Instructions and Training Schedule-Pdf
தமிழ்நாட்டிலுள்ள
மாவட்டங்களை மண்டலங்களாகப் பிரித்து , மண்டலங்களில் உள்ள பள்ளிகளில் இயக்குநர்கள்
, இணை இயக்குநர்கள் வகுப்பறை உற்றுநோக்கல் மற்றும் பள்ளிப் பார்வையினை
மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் மண்டல அளவில் தஞ்சாவூர்
, திருநெல்வேலி , விழுப்புரம் ஆகிய மண்டலங்களில் நடைபெற்ற
ஆய்வுக் கூட்டத்தில் வகுப்பறை உற்று நோக்கல் சார்ந்து
பெற்ற விவரங்களை ஆய்வு செய்தபோது , மாணவர்களுக்கு
கற்றல் அடைவுகளை அடையச் செய்வதற்கான ஆசிரியர்களின்
முயற்சிகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் கண்டறியப்பட்டது.
தமிழ்நாட்டிலுள்ள தொடக்க , நிலை , உயர்நிலை மற்றும்
மேல்நிலைப்பள்ளிகளிலுள்ள ஒன்றாம் வகுப்பு முதல்
பத்தாம் வகுப்பு வரை பயிலும்
மாணவர்களுக்கான பாடவாரியான , மாநிலப் பாடத்திட்டத்திற்கான கற்றல்
அடைவுகள் ( Learning
Outcomes ) மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால்
வரையறுக்கப்பட்டு அதனை மாணவர்களுக்கு அடையச்
செய்வதற்கான கற்பித்தல் முறைகள் குறித்தும் ஏற்கெனவே
பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது சார்ந்து ஆசிரியர்களுக்குள்ள
சந்தேகங்களை நிவர்த்திக்கும் பொருட்டும் , ஒவ்வொரு பாடத்திற்குமான கற்றல்
அடைவுகளை எங்ஙனம் மாணவர்களுக்கு அடையச்செய்வது
என்பது குறித்து தெளிவான புரிதலை ஏற்படுத்திக்
கொள்ள ஏதுவாக தொடக்க , நடுநிலை
, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு
வரைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி கட்டாயமாகிறது.
ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் :
தொடக்கப்பள்ளி
ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்கப்படும்போது பள்ளியிலுள்ள
மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையை இரண்டாகப் பிரித்துக் கொண்டு பயிற்சியில் பங்கேற்கச்
செய்தல் வேண்டும். ஒரு குழு பயிற்சியில்
ஈடுபடும்போது , மற்றொரு குழு பள்ளிச்
செயல்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்
ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு
வரைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் அவரவர் கற்பிக்கும் பாடத்திற்கான
கற்றல் அடைவுப் பயிற்சி நடைபெறும்
நாளில் பங்கேற்கச் செய்தல் வேண்டும் . வட்டாரக்கல்வி
அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள்
பயிற்சி நடைபெறுவதை உற்று நோக்குவதுடன் தங்களது
முதன்மைப்பாடம் சார்ந்த கற்றல் அடைவு
வலுவூட்டல் பயிற்சி நடைபெறும் நாட்களில்
அவர்கள் முழுமையாக அப்பயிற்சியில் பங்கேற்கவேண்டும்.
No comments
Post a Comment