உபரி பணியிட நிரவலுக்குப் பின்னர் உள்ள பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்பிட கோரிக்கை.... - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, January 4, 2022

உபரி பணியிட நிரவலுக்குப் பின்னர் உள்ள பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்பிட கோரிக்கை....

உபரி பணியிட நிரவலுக்குப் பின்னர் உள்ள பணியிடங்களை  பதவி உயர்வின் மூலம் நிரப்பிட கல்வி ஆர்வலர்கள் விருப்பம்..

 

தற்போது அரசுப் பள்ளிகளில் மாநிலம் முழுவதும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை பள்ளிகளில் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation) நடைபெற்றதில் கூடுதல் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன மற்றும் உபரி பணியிடங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

 

 இந்நிலையில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கான பணிகள் தொடங்கியுள்ளது. முன்னதாக கொரோனா காலகட்டத்தில் கல்வி மேம்பாடு கருதி இந்த ஆண்டு பணிநிரவலை முற்றிலும் கைவிட்டால் சிறப்பு என ஆசிரியர் சங்கங்கள் கோரி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க அரசு பணிநிரவலை நடைமுறைப்படுத்தினால், staff fixation மூலம் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ள பணியிடங்களில் உபரி ஆசிரியர்களை நியமித்த பின்னரும் உள்ள காலிப் பணியிடங்களை நேரடி நியமனத் தொகுப்பிற்கு அனுப்பாமல் பதவி உயர்வு மற்றும் மாறுதல்  மூலம் நிரப்பிட கல்வி ஆர்வலர்கள் விரும்புகின்றனர். பணியிடங்களை நேரடி நியமனத் தொகுப்பிற்கு அனுப்பி, தகுதித் தேர்வுக்கு அழைப்பு விடுத்து தேர்வு நடத்தி பின்னர் பணி நியமனங்கள் செய்வது கொரோனா காலகட்டத்தில் கூடுதல் கால தாமதங்கள் ஏற்படுவதுடன் அரசுக்கு கூடுதல் நிதிச் சுமையையே ஏற்படுத்தும்.

   

 குறிப்பாக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்புவதால் அரசுக்கு நிதிச் செலவினம் மிகக் குறைவே. உதாரணமாக தற்போது பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்றால் அவர்களுக்கு கிடைக்கும் ஒரு இன்கிரிமென்ட் தொகைக்கு ஏறக்குறைய இணையான தொகையான தனி ஊதியத்தை பதவி உயர்வில் இழக்கும் நிலையே தற்போது உள்ளது. ஆகமொத்தத்தில் அரசுக்கு பதவி உயர்வு அளிப்பதனால் கூடுதல் செலவினம் என்பதே மிகச்சிறிய அளவில் மட்டுமே ஏற்படும். நேரடி நியமன முறையினால் தற்போது கால அவகாசம் அதிகமாவதுடன் நிதிச்சுமையே ஏற்படும்.

 

 எனவே தமிழக அரசு, அரசுப்பள்ளிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைகளால் ஏற்பட்டுள்ள கூடுதல் பணியிடங்களில், வாய்ப்பிருந்தால் இந்த ஆண்டு கல்வி நலன் கருதி பணி நிரவலைத் தவிர்க்கலாம், வாய்ப்பில்லாத நிலையில் ஏற்படும் காலிப் பணியிடங்களை உபரிக்குப் பின்னர் நேரடி நியமனத் தொகுப்பிற்கு அனுப்பாமல் பதவி உயர்வு மூலம் பணியிடங்களை நிரப்பி கொரோனா கால கற்றல் கற்பித்தல் இடைவெளிகளை போக்கிட ஆவன செய்ய கல்வி ஆர்வலர்கள் விரும்பி அரசு இதனை நிறைவேற்றி கல்வி நலன் காத்திடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர் நம்பிக்கையுடன்.



No comments: