Petrol ,Diesel-Price பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 10 ரூபாய் குறைத்தது ஒன்றிய அரசு..! ( செய்திக்குறிப்பு இணைப்பு)
ஒரே நாளில் பெட்ரோல், டீசல்
விலை அதிரடியாக குறைப்பு! மத்திய அரசு உத்தரவு!
எவ்வளவு தெரியுமா?
டெல்லி:
தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான
கலால் வரியை குறைப்பதாக மத்திய
அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில்
கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல்,
டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த
வந்தது. இதனால் ஏழை மற்றும்
நடுத்தர வர்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்
.
பெட்ரோல்
மற்றும் டீசல் மீதான வரியை
மத்திய அரசு குறைக்க வேண்டும்
என பலரும் வலியுறுத்தினர். இந்நிலையில்,
தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான
கலால் வரியை குறைப்பதாக மத்திய
அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பெட்ரோல்
மீதான கலால் வரி ரூ
5, டீசல் மீதான கலால் வரி
ரூ 10 குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை
முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல
மாநிலங்களும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான
மதிப்பு கூட்டு வரியை குறைக்க
வேண்டும் என மத்திய அரசு
அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில்
தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல்
106.66 ரூபாய்க்கும் டீசல் ஒரு லிட்டர்
102.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
No comments
Post a Comment