மீயூசுவல் பண்ட் வாடிக்கையாளர்களே உஷார் - அக்கௌன்ட் ஸ்டேட்மெண்டை கவனமாக கவனியுங்கள் மீச்சுவல் பண்டில் விடை தெரியாத கேள்விகள் ?
மீயூசுவல்
பண்ட் வாடிக்கையாளர்களே உஷார் - அக்கௌன்ட் ஸ்டேட்மெண்டை
கவனமாக கவனியுங்கள் - இல்லையெனில் உங்கள் பணம் உங்களுடையது
இல்லை
மீச்சுவல் பண்டில் தகிடுதத்தம்
விடை தெரியாத கேள்விகள் ?
நண்பர்களே கடந்த ஜூலை மாதம் குவான்ட் மியூச்சுவல் பண்டில் பணம் இன்வெஸ்ட் செய்தேன். பிறகு ஸ்டேட்மெண்ட் பெற்றேன். மீண்டும் எட்டாவது மாதத்தில் ஒரு ஸ்டேட்மென்ட் பெற்றேன். இந்த இரண்டு
ஸ்டேட்மெண்ட்லும் மோட்
ஆப் ஹோல்ட்டிங் என்கிற இடத்தில் சிங்கிள் என்றும், எனது பெயர் மட்டுமே
கொடுத்திருந்தேன். தற்போது மீண்டும்
11 வது மாதம் ஸ்டேட்மென்ட் எடுத்த
பொழுது திடீரென இடையில் ஜாயின்ட்
ஹோல்டர் ஒருவருடைய பெயரை இணைத்துள்ளார்கள். மேலும்
மோட் ஆப் ஹோல்ட்டிங் என்கிற
இடத்தில் எனிஒன்
ஆர் சர்வைவர் என்று மாற்றியுள்ளார்கள். நான்
எந்தவிதமான ரிக்வெஸ்ட் கொடுக்காமலேயே எனது அக்கவுண்டுக்கு வேறு
ஒருவரை சேர்த்துவிட்டார்கள்.
இதை பார்த்தவுடன் எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. உடனடியாக
குவாண்டு நிறுவனத்திற்கும், எம் எப் உட்டிலிட்டி
நிறுவனத்துக்கும் மெயில் அனுப்பினேன்.
5 நாட்கள் வரை எந்த பதிலும்
இல்லை . விரைவில் சரி செய்யப்படும் என்று
கூறினார்கள். மீண்டும் எம் எப் உட்டிலிட்டியை
தொடர்பு கொண்டபோது ஏழு
நாட்கள் கழித்து மோட் ஆப்
ஹோல்ட்டிங் என்கிற இடத்தில் சிங்கள்
என்றும், புதிதாக சேர்த்தவரின்
பெயரை எடுத்து விட்டு எனக்கு புதிய ஸ்டேட்மென்ட் அனுப்பினார்கள்.
நண்பர்களே இங்கே கேள்விக்குரிய விஷயம் என்னவெனில் , நான் இன்வெஸ்ட் செய்தது எனது பணம். பணம் பாதுகாப்பாக இருக்கும் என்று தான் நாம் மியூச்சுவல் ஃபண்டில் இன்வெஸ்ட் செய்கிறோம் . ஆனால் சில நாட்களுக்கு முன்பு இதே குவாண்ட் பண்டில் ஒரு பேங்க் அக்கவுண்ட் எண்ணை ஆன்லைன் மூலமாக மியூச்சுவல் ஃபண்டில் மாற்றுவதற்கு
முடியாது என்று தெரிவித்து விட்டார்கள்.
பிறகு டாக்குமெண்ட் பேப்பராக அனுப்பினால்
தான் செய்ய முடியும் என்று
தெரிவித்தார்கள். டாக்குமெண்டை போஸ்டல் வழியாக கேபின்
டெக் நிறுவனத்திற்கு அனுப்பி அங்கிருந்து எனது
பேங்க் அக்கவுண்ட் நம்பரை நான் மாற்றினேன்.
அக்கவுண்ட் நம்பரை மாற்றும் பொழுது
எனக்கு மெசேஜ் வந்திருந்தது. என்னுடைய
மொபைல் நம்பரையோ அல்லது ஈமெயில் ஐடியை
மாற்றும் பொழுது மெசேஜ் வரும்.
ஆனால் ஒரு ஜாயிண்ட் ஹோல்டர்
ஒருவரை என்னுடைய அனுமதி இல்லாமல் சேர்க்கும்
பொழுது எனக்கு மெசேஜ் வராதது
எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்னுடைய பேங்க் அக்கவுண்ட்டையோ, வேறு
தகவல்களையோ மாற்றுவதற்கு
ஆன்லைன் மூலம் கூட
செய்ய முடியாது என்றும் தபால்
வழியாக டாக்குமெண்ட் ஆகத்தான் அனுப்ப வேண்டும் என்றும்
கூறிய குவாண்ட் நிறுவனம் , எனது அக்கௌண்டில்எனக்கு யாரென்றே
தெரியாத ஜாயின்ட் ஹோல்டரை எனது அனுமதி
இல்லாமல் எவ்வாறு மாற்ற முடியும்
என்பதுதான் மிகப்பெரிய அதிர்ச்சியான தகவல்.. ஜாயின்ட் ஹோல்டரை
அவர்கள் புதிதாக உள்ளே சேர்த்த
பொழுதோ அல்லது வெளியே எடுத்த
பொழுது எனக்கு எந்த விதமான
மெசேஜும் வரவில்லை. இதுபோன்று எனது மொபைல் எண்ணை எனக்கு
தெரியாமலே மாற்றி, ஒடிபியை அவர்களே வரவழைத்து
எனது அக்கவுண்ட் நம்பரை மாற்றி பணத்தை
எடுத்தால் என்ன செய்வது? மீசுவல்
பண்டில் இன்வெஸ்ட் செய்பவர்களுக்கு இது மிகப்பெரிய கேள்விக்குறி
? வாடிக்கையாளர்களே உங்களது ஆக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட்ல்
கவனமாக இருங்கள். நான்
வேறு பணியில் இருக்கின்றேன். பணத்தை
இன்வெஸ்ட் செய்து விட்டு எப்போது
எனக்கு வேண்டுமோ அப்பொழுதுதான்
நான் ஸ்டேட்மெண்ட் பார்க்க முடியும். தினந்தோறும்
பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதுபோன்று மீசுவல் பண்ட் நிறுவனங்கள்
திடீரென புதிய பெயர்களை சேர்ப்பு
அல்லது அக்கவுண்டில் இருந்து பணத்தை எடுத்துக்
கொண்டாலோ அவற்றை எவ்வாறு நாம்
சரி செய்வது? எவ்வாறு
நாம் கட்டுப்படுத்துவது? விழிப்புணர்வுடன்
இருந்தால் உங்கள் பணத்தை காப்பாற்றி
கொள்ளலாம்.வாடிக்கையாளர்களே உங்களுக்காகத்தான் இந்த தகவலை பகிர்கிறேன். இதனை
ஏன் மாற்றீனர்கள் ? எப்படி மாற்றினார்கள் ? அவர்கள்
செய்த தவறு என்ன என்பதற்கெல்லாம்
பதில் இல்லை. எனவேதான் , இது விடை
தெரியாத கேள்விகள் ? நன்றி.
எம்.எஸ்.லெட்சுமணன்
காரைக்குடி
.
No comments
Post a Comment