சிறுபான்மையினர் பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் விருப்பம் இன்றி நிர்வாக மாற்றம் செய்ய கூடாது... தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்..
சிறுபான்மை மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் அரணாக விளங்கும் மாண்புமிகு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக அரசின் உதவிபெறும் தனியார் / சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களை, தமிழக அரசின்
ஆணைக்கு முரணாக அவர்களின் *விருப்பமின்றி* அரசுப்பள்ளிக்கு நிர்வாக மாற்றம் செய்யும் செயலை தமிழ்நாடு தெடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அவ்வாறு சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் மீது சிறுபான்மை பள்ளிகளின் விதிக்கு முரணாக நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நேரடியாக ஆசிரியர்களுக்காக களத்தில் இறங்கி, மன்றத்தின் ஆற்றல்மிகு பொதுச் செயலாளர் அவர்களின் வழியாக முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று தூத்துக்குடி மாவட்ட மன்றம் நடவடிக்கை எடுத்து தனியார் மற்றும் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களை காக்கும்.
மாவட்ட அமைப்பளர், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்
தூத்துக்குடி மாவட்டம்.
No comments
Post a Comment