Header Ads

Header ADS

இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கான " சின்னம் ( Logo with Tag Line ) உருவாக்கினால் ரூ.25,000 பரிசு - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.- ATTACHED -PRESS RELEASE

சின்னம் ( Logo with Tag Line ) உருவாக்கினால் ரூ.25,000 பரிசு - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

 

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை " இல்லம் தேடிக் கல்வி " பத்திரிகைச் செய்தி :

 

கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொதுமுடக்கக் காலங்களில் , பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளிகளைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு " இல்லம் தேடிக் கல்வி " என்னும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

 

இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் :


கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொதுமுடக்கக் காலங்களில் , அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளைச் சரிசெய்தல் .


பள்ளி நேரத்தைத் தவிர , மாணவர்கள் வசிப்பிடம் அருகே . சிறிய குழுக்கள் மூலம் தன்னார்வலர்களின் மாணவர்களுக்குக் கற்றல் வாய்ப்புகளை வழங்குதல் , பங்கேற்புடன் மாணவர்கள் பள்ளிச் சூழலின் கீழ் ஏற்கனவே பெற்றுள்ள கற்றல் திறன்களை " இல்லம் தேடிக் கல்வி " திட்டச் செயல்பாடுகளின் வாயிலாக மீண்டும் வலுப்படுத்துதல்.

 

தன்னார்வலர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . அதைப் போலவே. 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதியாக இளங்கலை பட்டப் படிப்பு ( Any Degree ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காக செயல்படுத்தப்பட உள்ள இச்சிறப்புத் திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் அனைத்தையும் நகர் / ஊரகப் பகுதி மக்களிடையே எளிதாக கொண்டு சேர்க்கும் வகையிலும் மற்றும் இத்திட்டத்தின் ஒட்டு மொத்த இலக்கை மிக எளிதாக மக்களுக்கு உணர்த்தவும் இத்திட்டத்திற்கான சின்னம் ( Logo with . Tag Line ) மக்கள் பங்கேற்புடன் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


 இதற்கான சின்னம் ( Logo with Tag Line ) உருவாக்கும் போட்டி 24.10.2021 க்குள் நடத்தப்படவுள்ளது. இதில் அனைத்து நகர் / ஊரகப் பகுதியில் உள்ள பள்ளி / கல்லூரி மாணவர்கள். பெண்கள் , ஓய்வு பெற்ற ஊழியர்கள் , ஆசிரியர்கள் , பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தனிநபராகவோ அல்லது குழுவாகவோ பங்கேற்கலாம்.வயது வரம்பு ஏதும் இல்லை.

 

போட்டியாளர்களால் தயாரித்து வழங்கப்படும் சின்னம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தால் இறுதி செய்யப்படும். சிறந்த மற்றும் பொதுமக்களுக்கு எளிய வகையில் புரிந்திடும் வகையிலான ' சின்னத்தை உருவாக்கும் ஒரு வெற்றியாளருக்கு ரூபாய் 25,000 / - ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

 

போட்டியாளர்கள் தங்களின் இறுதிப்படைப்பினைillamthedikalvi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24.10.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் . போட்டியாளர்களால் வழங்கப்படும் சின்னத்தை இறுதி செய்யும் பொறுப்பு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையை சார்ந்ததாகும்.


DSE - Logo with Tag Line - Proceedings 

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇


 


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.