Header Ads

Header ADS

பள்ளிகளின் வேலை நேரம் குறித்து குழப்பம்: கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்

தமிழகத்தில் கரோனா பரவல் சற்று தணிந்துள்ளதால் செப்.1-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. முதல்கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரையான

மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

 

இதற்கிடையே பள்ளி வேலை நேரம் மாலை 3.30 மணிக்கு முடிவடையும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். ஆனால், கல்வித்துறை சார்பில் முறையான அறிவிப்பு

வெளியாகாததால் பள்ளி முடியும் நேரம் குறித்து தலைமையாசிரியர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.

 

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அமைச்சரின் கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. சென்னை உட்பட நகர்புறங்களில் இயங்கும் பள்ளிகள் காலை 8.30 முதல் மாலை 3.30 மணி வரைஇயங்க வேண்டும். இதரப் பகுதிகளில் உள்ள பள்ளிகள் வழக்கம்போல் காலை 9.30 முதல் மாலை 4.30 வரை செயல்பட வேண்டும்.

 

இந்த கருத்தைத்தான் அமைச்சர் தெரிவித்திருந்தார். எனவே, தங்கள் பகுதியின் சூழலுக்கேற்ப பள்ளியின் வேலை நேரத்தை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியின் ஒப்புதலுடன் தலைமையாசிரியர்கள் முடிவு செய்து கொள்ளலாம்’’ என்றனர்.


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.