Header Ads

Header ADS

தமிழ்நாடு பட்ஜெட் 2021-துளிகள்

தமிழ்நாடு பட்ஜெட்  2021-துளிகள்

தமிழக பட்ஜெட் 2021-22: - நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள் :

 

* தமிழக காவல் துறையில் 14,317 பணியிடங்கள் நிரப்பப்படும்.

 

தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

10:58 Aug 13

 

 200 குளங்களின் தரம் உயர்த்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி 111.24 கோடி.

 

பொது விநியோக திட்டத்தின் கீழ் தேவையான இடங்களில் புதிய நியாயவிலைக் கடைகள் அமைக்கப்படும்.

 

10:50 Aug 13

 

தமிழக காவல்துறையில் 14,317 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

 

 

 

தலைமைச்செயலகம் முதல் அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள் வரை தமிழை ஆட்சிமொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும்.

 

 

 

10:49 Aug 13

 

200 குளங்களின் தரம் உயர்த்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி 111.24 கோடி.

 

 

 

பொது விநியோக திட்டத்தின் கீழ் தேவையான இடங்களில் புதிய நியாயவிலைக் கடைகள் அமைக்கப்படும்.

 

 

 

சாலைப் பாதுகாப்பு திட்டத்துக்காக பல்வேறு துறைகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.

 

10:45 Aug 13

 

 தமிழ்நாட்டின் நிதிநிலை மூன்றாண்டுகளில் சரி செய்யப்படும்.

 

புகழ்பெற்ற வல்லுநர்கள் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்படும்.

 

 

 

1921ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சட்டமன்றம் நிகழ்வுகள் கணினிமயமாக்கப்படும்.

 

10:44 Aug 13

 

பொது விநியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அறிமுகம்

 

 பொது விநியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

 

10:39 Aug 13

 

 தலைமைச்செயலகம் முதல் அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள் வரை தமிழை ஆட்சிமொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும்.

 

 

 

10:39 Aug 13

 

தொல்லியல் ஆய்வுகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு: பட்ஜட்

 

 

 

தமிழகத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள இந்த ஆண்டில், ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

 

 

 

மேலும், கீழடி, கொற்கை உள்ளிட்ட தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

 

10:30 Aug 13

 

கருணாநிதி செம்மொழி விருது

 

பொது நிலங்களை முறையாகப் பயன்படுத்த அரசு நில மேலாண்மை அமைப்பு அமைக்கப்படும்.

 

 

 

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்தின் கீழ் தமிழ் படைப்புகள் மொழி பெயர்க்கப்படும்.

 

 

 

ஆண்டுதோறும் ஜூன் 3ல் கருணாநிதி செம்மொழித்தமிழ் விருதும் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.

 

 

 

10:27 Aug 13

 

 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்திட்டத்தின் கீழ் மொத்தம் பெறப்பட்ட மனுக்களில், இதுவரை 2,29,216 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது - பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

 

10:19 Aug 13

 

 

 

இயற்றலும் ஈட்டலும் என்று தொடங்கும் திருக்குறளை மேற்கோள்காட்டி பட்ஜட் உரையை தொடங்கினார் பழனிவேல் தியாகராஜன்.

 

 

 

தொடர்ந்து அவர் பேசுகையில், நிதியாண்டின் எஞ்சிய 6 மாத காலத்துக்கு மட்டுமே இந்த நிதிநிலை அறிக்கை பொருந்தும்.

 

 

 

எந்தவொரு சிக்கல்களையும் சரி செய்யும் முதல் படி அதனை அடையாளம் கண்டு அதன் ஆழத்தை புரிந்து கொள்வதுதான் .

 

 

 

முதல்வர் அளித்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து அதனை படிப்படியாக நிறைவேற்றுவோம்.

 

 

 

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பதவியேற்றதுமே 5 வாக்குறுதிகளை நிறைவேற்றம் திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

 

 

 

10:06 Aug 13 பட்ஜெட் தாக்கல்

 

கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் இன்று, 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

 

 

 

10:05 Aug 13

 

 தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு சட்டப் பேரவை உறுப்பினரின் இருக்கைக்கு முன்பாகவும் கணினி வைக்கப்பட்டுள்ளது. இத்துடன் கையடக்கக் கணினியும் வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சா் நிதிநிலை அறிக்கையை வாசிக்க, வாசிக்க அதிலுள்ள வரிகள் அனைத்தும் கணினியில் தெரியும். மேலும், நிதிநிலை அறிக்கையை புத்தக வடிவில் கையடக்கக் கணினியில் பாா்க்க முடியும். இதற்காக சட்டப் பேரவை மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

10:04 Aug 13

 

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெடகூட்டத் தொடர் சட்டபேரவை தலைவர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.

 

 

 

10:02 Aug 13

 

 முதல்வர் மு.. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும்.

 

10:02 Aug 13 முதல்வர் வருகை

 

கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.