Header Ads

Header ADS

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? இன்று முக்கிய ஆலோசனை

பள்ளிகளை திறப்பது மற்றும் பிளஸ் 2 ரிசல்ட் வெளியிடுவது தொடர்பாக, கல்வித்துறை அதிகாரிகளுடன், இன்று (ஜூலை 16) அமைச்சர் மகேஷ் ஆலோசனை நடத்த உள்ளார்.

 

 

நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளை திறப்பது, மாணவர் சேர்க்கையை

அதிகரிப்பது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, பள்ளி கல்வித்துறை சார்பில், இன்று சிறப்பு ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.

 

 

 

பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ், பள்ளி கல்வி இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில், 20க்கும் மேற்பட்ட பள்ளி கல்வி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக, பள்ளி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

 

கொரோனா அச்சம் சற்று தணிந்துள்ள நிலையில், ஆந்திரா, தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் பள்ளிகளைத் திறக்க அனுமதிக்குமாறு, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக இன்று ஆலோசனை நடத்துகிறார். துறையின் பல முக்கிய அதிகாரிகள் இதில் பங்கேற்கின்றனர். பள்ளிகளைத் திறப்பதா வேண்டாமா, பள்ளிகளைத் திறப்பதாக இருந்தால் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.