இன்று (13.07.2021) தலைமைச் செயலகத்தில் CPS ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்புகளும் முறையீடுகளும்
*CPS ஒழிப்பு இயக்கம்*
*மாநில மையம்*
*இன்றைய சந்திப்புகளும் முறையீடுகளும்:*
*இன்று (13.07.2021) தலைமைச் செயலகத்தில் CPS ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கீழ்க்கண்ட உயர் அலுவலர்களைச் சந்தித்து CPS திட்டத்தை முழுமையாக இரத்து செய்து பழைய ஓய்வூதியத்
திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தோம்.*
*1. தலைமைச் செயலாளரின் தனி செயலாளர்*
*2.கூடுதல் தலைமைச் செயலாளர் (நிதித்துறை) தனி செயலாளர்,*
*3. நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரின் தனி செயலாளர்*
*4.திரு. உமாநாத் IAS, முதலமைச்சரின் செயலாளரின் தனி செயலாளர்*
*5.திரு.பிரசாந்த் மு. வடநேரே IAS,*
*நிதித்துறை கூடுதல் செயலாளரின் தனி செயலாளர்*
*6.முதலமைச்சர் துணைச் செயலாளர்,*
*7. ரீட்டா ஹரிஷ் தக்கர்,IAS,* *நிதித்துறை அரசு சிறப்புச் செயலாளர்*
*8. திரு. து.ஸ்ரீதர், நிதித்துறை இணை செயலாளர்.*
*CPS திட்டத்தை ரத்து செய்யும் இடத்தில் அதிகாரிகள் இல்லை என்றும் இது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு சார்ந்தது என்றும் தெரிவித்தனர்.*
*சிபிஎஸ் ஒழிப்பு இயக்க கோரிக்கையை உரிய வகையில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தனர்.*
*மேலும், நிதி அமைச்சரிடம் இதுகுறித்து பேச நேரம் ஒதுக்கித் தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.*
_______________________
*மு.செல்வக்குமார்*
*சு.ஜெயராஜராஜேஸ்வரன்*
*பி. பிரெடெரிக் எங்கெல்ஸ்*
*மாநில ஒருங்கிணைப்பாளர்கள்*
*சி. ஜான் லியோ சகாயராஜ்.*
*மாநில நிதிக் காப்பாளர்.*
No comments
Post a Comment