பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யா மொழி கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் ஆய்வு- PHOTO COLLECTION-PDF
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யா மொழி கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள், கழிப்பறைகள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட
கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆங்காங்கே
நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை
நேரில் ஆய்வு செய்தார் .
🦚 ஆய்வில், பெண்
குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் வழங்கினார்.. மேலும், அரசுப் பள்ளிகளில்
மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கும், கற்பித்தலை மேம்படுத்துவதற்குமான ஆலோசனைகளை வழங்கினார் .
🦚 நரிகட்டியூர் ஊராட்சி
ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியையின் மகன் ஹர்ஷத்தை, அதே
பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்த்த
ஆசிரியைக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
🦚 பள்ளி வளாகங்களில்
மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி
வைத்தார். கரூரில் உள்ள மாவட்ட
மைய நூலகத்தையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது,
தேவையான வசதிகளைத் தயக்கமின்றி எந்த நேரத்திலும் தன்னிடம்
கேட்குமாறு கூறினார்.
🦚 ஆய்வின் போது கரூர் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உடனிருந்தனர்
No comments
Post a Comment